Kargil Vijay Diwas:கார்கில் போர் வெற்றி நினைவு நாள்.. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை
காஷ்மீர்: 21வது கார்கில் போர் வெற்றி நினைவு நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கார்கில் போர் வெற்றிக்கு வழி வகுத்த ஆப்ரேஷன் விஜய் திட்டத்தை கொண்டாடும் வகையில் இந்த நாள் நினைவு கூறப்படுகிறது. இதற்காக இன்று தேசிய போர் நினைவு சின்னத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.
Recommended Video

இந்தியா சீனா இடையே இப்போது லடாக்கில் மோதல் நிலவி வருகிறது. எப்போது வேண்டுமானாலும் போராக வெடிக்கும் அபாயம் கூட இதில் உள்ளது. இதேபோல்தான் 1999ல் இந்தியா பாகிஸ்தான் இடையே காஷ்மீரில் மோதல் நிலவியது.

கார்கில் பகுதியை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயன்றது. இந்தியா இதற்கு எதிராக கடுமையாக போராடி வென்றது . 1999ல் காஷ்மீரின் கார்கில் பகுதியில், மே தொடங்கி ஜூலை மாதம் வரை கார்கில் போர் நடந்தது. ஆனால் அதற்கு முன்பே பல வருடங்களாக இந்த பகுதியில் பிரச்சனை நிலவி வந்தது.
கார்கில் பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றியதில் இருந்தே, இரண்டு நாடுகளுக்கும் பெரிய பிரச்சனை நிலவி வந்தது. இந்த நிலையில்தான் இந்திய படைக்கும், பாகிஸ்தான் படைக்கும் இடையில் பெரிய போர் உருவானது. முழு வீச்சில் இந்த போர் நடந்தது. இந்தியாவின் கை கார்கில் போரில் தொடர்ந்து உயர்ந்தே இருந்தது.
இந்திய படை வலுவாக இருந்த காரணத்தால் தொடர்ந்து அதிரடி தாக்குதல் நடத்தி வந்தது. உலக நாடுகள் கணித்தது போலவே, இந்தியா இந்த போரில் வென்றது. இந்தநிலையில் தற்போது 21வது கார்கில் போர் வெற்றி நினைவு நாளை முன்னிட்டு காஷ்மீரில் சிறப்பு விழா கொண்டாடப்படுகிறது. காஷ்மீரில் உள்ள டிராஸ் வார் மெமோரியல் என்ற, கார்கில் போர் நினைவிடத்தில் சிறப்பு விழா நடக்கிறது.

முக்கியமாக காஷ்மீரில் பாகிஸ்தானை மண்ணை கவ்வ வைக்கும் அளவிற்கு இந்தியா களமிறங்கிய ஆபரேஷன் விஜய் இன்று நினைவு கூறப்படுகிறது. கார்கில் போர் வெற்றிக்கு வழி வகுத்த ஆப்ரேஷன் விஜய் திட்டத்தை கொண்டாடும் வகையில் இந்த நாள் நினைவு கூறப்படுகிறது. இதற்காக இன்று தேசிய போர் நினைவு சின்னத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.
இந்த போரில் இறந்த 500 இந்திய வீரர்களுக்கு இந்த விழாவில் மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோல், இந்த போரில் கலந்து கொண்டு உயிரோடு இருக்கும் வீரர்களுக்கு மரியாதை அளிக்கப்படும். இந்த விழாவில் ராஜ்நாத் சிங் உடன் முப்படை தளபதிகளும் உடன் இருந்தனர்.

இந்த கார்கில் வெற்றி பாகிஸ்தானில் மட்டும் இந்தியாவின் வலிமையை பறைசாற்றவில்லை. மொத்த உலகத்திற்கும் இந்தியாவின் வலிமை அப்போதுதான் தெரிந்தது. முக்கியமாக ஆசிய கண்டத்தில் இந்தியா முக்கியமான நாடாக மாறியது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications