கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஆறுவயது சிறுவன்: உயிரோடு மீட்க போராட்டம்
பாகல்கோட்டை: திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் 6 வயது சிறுவன் சிக்கிக்கொண்ட சம்பவம் கர்நாடகாவில் மீண்டும் நடந்துள்ளது.
ஜூன் 17ம்தேதி, பிஜாப்பூர் மாவட்டத்தில் நான்கு வயது சிறுமி அக்ஷதா ஆழ்துளை கிணற்றில் விழுந்து 46 மணி நேரத்துக்கு பிறகு உயிரிழந்தாள்.

இந்நிலையில் பாகல் கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா சூலிகேரி கிராமத்தில் இன்று அதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. இன்று மதியம், அக்கிராமத்திலுள்ள சுமார் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் திம்மண்ணா என்ற ஆறு வயது சிறுவன் எதிர்பாராமல் தவறி விழுந்துள்ளான்.
ஹனுமந்தஹட்டி என்பவர் இந்த ஆழ்துளை கிணற்றை தோண்டிவிட்டு தண்ணீர் வரவில்லை என்று அதை அப்படியே திறந்துவிட்டதன் விளைவாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
சிறுவன் சுமார் 90 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்பு துறை இணைந்து மீட்பு பணியை துவக்கியுள்ளன. குழாய் மூலம் ஆக்சிஜன் உள்ளே அனுப்பப்படுகிறது. ஆக்சிஜனை சிறுவன் சுவாசிப்பதால் அவன் உயிரோடு இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனிடையே, ஆழ்துளை கிணற்றில் விழும் சிறுவர்களை ரோபோ உதவியுடன் மீட்பதில் பயிற்சி பெற்ற மதுரையை சேர்ந்த மணிகண்டனுக்கும் சம்பவ இடத்துக்கு வருமாறு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் பெங்களூருக்கு சாலை மார்க்கமாகவும், அதன்பிறகு ஹெலிகாப்டர் மூலமாக பாதாமி செல்வார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications