விடாது கருப்பு.. புதிய உத்தரவிலும் திருத்தம் கோரிய கர்நாடகா- 'நொச்சு'ன்னு குட்டிய சுப்ரீம்கோர்ட்!
டெல்லி: தமிழகத்துக்கு செப்டம்பர் 20-ந் தேதி வரை நாள்தோறும் 12,000 கனடி நீரை திறந்துவிட என்ற புதிய உத்தரவிலும் திருத்தம் கோரியது கர்நாடகா தரப்பு. ஆனால் தமிழகத்துக்கு நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவில் மாற்றம் செய்ய முடியாது; அதுவே இறுதி உத்தரவு என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு நாள்தோறும் 15,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்று கடந்த 5-ந் தேதி கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி கர்நாடகா நீரை திறந்துவிட்டது.

அதே நேரத்தில் இந்த உத்தரவை மாற்றி அதாவது 6 நாட்களுக்கு மட்டும் நீரை திறக்க உத்தரவிட வேண்டும் என்று புதிய மனுவை கர்நாடகா தாக்கல் செய்தது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்தது.
கர்நாடகாவின் திருத்தம் கோரும் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது கர்நாடகாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், தமிழகத்துக்கு வரும் 20-ந் தேதி வரை நாள்தோறும் 12,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என புதிய உத்தரவை பிறப்பித்தது.
இந்த புதிய உத்தரவால் தமிழகத்துக்கு கூடுதல் நீரை தர வேண்டியுள்ளது. ஆகையால் இந்த உத்தரவிலும் திருத்தம் வேண்டும் என்று கர்நாடகா தரப்பு வழக்கறிஞர் பாலி நாரிமன் கேட்டுக் கொண்டார். ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளோ, பிறப்பித்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று கறாராக கூறிவிட்டது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications