முஸ்லிம் வாக்குகளை பிரிக்க ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியுடன் கர்நாடகாவில் பாஜக ரகசிய கூட்டணி?
முஸ்லிம் வாக்குகளை பிரிக்க ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியுடன் கர்நாடகாவில் பாஜக ரகசிய கூட்டணி அமைத்துள்ளது.
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் முஸ்லிம் வாக்குகள் கொத்தாக காங்கிரஸ் பக்கம் போவதைத் தடுக்கும் வகையில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியையும் போட்டியிட வைக்கிறதாம் பாஜக.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் முஸ்லிம் வாக்குகளைப் பிரிக்கும் நோக்கத்துடன் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியை பாஜக போட்டியிட வைத்தது. இதனால் முஸ்லிம் வாக்குகள் எதிர்க்கட்சிகளுக்கு கொத்தாக கிடைக்காமல் போனது.

இதே பாணியை கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கும் பின்பற்றுகிறது பாஜக. இது தொடர்பாக கருத்து தெரிவித்த கர்நாடகா உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, உத்தரப்பிரதேசத்தில் பாஜக கூறியதால்தான் மஜ்லிஸ் கட்சி தேர்தலில் போட்டியிட்டது. இங்கேயும் அதை செய்கிறது பாஜக. ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியுன் பாஜக ரகசிய கூட்டணி வைத்துள்ளது என்றார்.
ஆனால் பாஜக இதனை நிராகரித்துள்ளது. முத்தலாக் சட்டத்தால் பாஜகவுக்கு நன்றி தெரிவிக்கவே முஸ்லிம் பெண்கள் வாக்களிக்கின்றனர். இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் அவதூறுகளை பரப்புகிறது காங்கிரஸ் என்கிறார் கர்நாடகா பாஜகவின் செய்தித் தொடர்பாளர் மாளவிகா அவினாஷ்.
கர்நாடகாவில் பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை பாஜக கைப்பற்றும்; ஆட்சி அமைக்க தேவைப்பட்டால் மஜ்லிஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆதரவையும் கோருவோம் என்றும் மாளவிகா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 224 தொகுதிகளில் 60 இடங்களில் மஜ்லிஸ் கட்சி போட்டியிட உள்ளது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!











Click it and Unblock the Notifications