மாட்டிறைச்சி: கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலையை வெட்டுவேன் என மிரட்டிய பா.ஜ.க. பிரமுகர் கைது!!
பெங்களூர்: மாட்டிறைச்சி சாப்பிட்டால் கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலையை வெட்டுவேன் என்று மிரட்டிய பாரதிய ஜனதா பிரமுகர் சென்னபசப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.
மாட்டிறைச்சி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, எனக்கு மாட்டிறைச்சி பிடித்தால் சாப்பிடுவேன். அதை யாரும் தடுக்க முடியாது. ஒருவரின் உணவு உரிமை குறித்து கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்று கூறியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து விஸ்வ ஹிந்து பரிஷத், ஸ்ரீராம் சேனா, சிவசேனா, பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளும் பாரதிய ஜனதா கட்சியினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஷிமோகாவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட பகுதியில் பேசிய அம்மாவட்ட பாஜக செயலாளரும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் நெருங்கிய ஆதரவாளருமான சென்னபசப்பா, இந்துக்கள் தெய்வமாக வணங்கும் மாட்டின் இறைச்சியை சாப்பிடுவேன் என சித்தராமையா பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதை யாராலும் தடுக்க முடியாது என்று பேசியுள்ளார். முடிந்தால் அவர் ஷிமோகாவுக்கு வந்து மாட்டிறைச்சி சாப்பிடட்டும். அவ்வாறு சாப்பிட்டால் சித்தராமையாவின் தலையை வெட்டுவேன் என்றார்.
அவரது இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சென்ன பசப்பா மீது ஷிவமோகா மாவட்ட காங்கிரஸ் செயலாளர் பிரசன்னகுமார் போலீஸில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து சென்னபசப்பா மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications