கர்நாடக முதல்வர் சித்தராமையா அணிந்துள்ள வாட்ச் மதிப்பு ரூ.70 லட்சம்?
பெங்களூர்: கர்நாடக முதல்வர் சித்தராமையா அணிந்துள்ள கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.70 லட்சம் என்று மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் மாநில தலைவர் ஹெச்.டி.குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுபற்றி குமாரசாமி கூறுகையில், சித்தராமையா அணிந்துள்ள கைக்கடிகாரத்தின் விலை ரூ.68,56,000 ஆகும். சுங்க வரியையும் சேர்த்து பார்த்தால் அதன் மதிப்பு ரூ.70 லட்சம் இருக்கும்.

ஹுப்லோட் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த வாட்சில், வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. சமீப காலமாகத்தான் இந்த கடிகாரத்தை சித்தராமையா அணிந்துள்ளார். சித்தராமையா எத்தனை லட்சத்திற்கு வாட்ச் அணிந்திருந்தாலும் நான் கவலைப்பட போவதில்லை. ஆனால், ராம் மனோகர் லோகியா போன்ற சமூகவாதியை பின்பற்றுபவன் என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் சித்தராமையா, இத்தனை லட்சம் ரூபாய் மதிப்பில் வாட்ச் அணிவது சரியா?
சித்தராமையா அந்த வாட்சை அணிவதும், சில்க் சட்டை அணிவதுமான வீடியோக்கள் என்னிடம் உள்ளன. வாட்ச் விலையை தெரிந்துகொள்ள, அதன் போட்டோவை துபாய்க்கு அனுப்பி, உறுதி செய்துள்ளேன். இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.
இதனிடையே, குற்றச்சாட்டை மறுத்துள்ள சித்தராமையா, "குமாரசாமி அந்த வாட்சுக்கு ரூ.10 லட்சம் கொடுத்தால் கூட போதும், நான் அதை விற்பனை செய்ய தயாராக உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications