காவிரி தீர்ப்பு வெளியானபோது பட்ஜெட் தாக்கல் செய்த சித்தராமையா
Recommended Video

பெங்களூர்: காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வெளியிட்ட நேரத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஆகியோர் மாநில பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி சட்டசபைக்குள் இருந்தனர்.
கர்நாடக அரசின் 2018-19ம் நிதியாண்டு பட்ஜெட்டை முதல்வரும், நிதித்துறை பொறுப்பை தன்வசம் வைத்துள்ளவருமான சித்தராமையா, இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். காலை 11 மணிக்கு அமைச்சரவையை கூட்டி, பட்ஜெட் உரைக்கு ஒப்புதல் பெற்ற முதல்வர், காலை 11.30 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார்.

நிதி அமைச்சர், முதல்வர் என பல பதவி வகித்த சித்தராமையா தாக்கல் செய்யும் 13வது பட்ஜெட் இதுவாகும்.
Looking forward to presenting my 13th Budget as CM/FM.
— Siddaramaiah (@siddaramaiah) February 16, 2018
It has been a great journey of 4 decades as a farmer’s leader, as a Kannada Activitist, as a Minister, as a Leader of Opposition & as CM
Have changed policy in favor of the poor.
There is more to do.#KayakaveKailasa
இந்த நிலையில், காவிரி தீர்ப்பு 10.30 மணிக்கு வெளியானது. அப்போது கன்னட அமைப்பினர் வன்முறையில் இறங்கினால் உடனுக்குடன் அதை கட்டுப்படுத்த உத்தரவு பிறப்பிக்கும் நிலையில், முதல்வர் இருக்க முடியவில்லை. உள்துறை அமைச்சர் மிகவும் அவசரம் என்றால் மட்டும் வெளியே வருவார். அல்லது சட்டசபைக்குள்தான் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அதிருஷ்டவசமாக அப்படி எதுவும் கலவரம் வெடிக்கவில்லை.












Click it and Unblock the Notifications