Kannada Kamal: "கன்னடம் வரலாறு தெரியாம பேசாதீங்க".. கமல்ஹாசனை விமர்சித்த கர்நாடகா முதல்வர் சித்தராமையா
பெங்களூர்: ஒருபக்கம் மாநிலங்களவை எம்.பி பதவி, இன்னொரு பக்கம் தக் லைஃப் படம் என்று கமல் அரசியல், சினிமா இரண்டிலும் பரபரப்பாக காணப்படுகிறார். ஆனால் தமிழ் மொழியில் இருந்து கன்னடம் மொழி சென்றது என்ற அவரின் கருத்து கர்நாடகாவில் பிரளயத்தை கிளப்பி உள்ளது. இதற்கு கண்டனம் வலுத்து வரும் நிலையில், கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது. கமல் - மணிரத்னம் - சிம்பு - ஏ.ஆர் ரஹ்மான் காம்போவில் உருவான தக் லைஃப் திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. ஆனால் அந்த கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாதளவுக்கு கமல் பிரச்னையில் சிக்கியுள்ளார்.

தக் லைஃப் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பாராட்டி பேசிய கமல்ஹாசன், "உங்கள் பாஷை தமிழில் இருந்து வந்தது." என்று கூறியிருந்தார். தமிழில் இருந்து கன்னடம் வந்தது என்று கமல்ஹாசன் கூறியதற்கு கர்நாடகா மாநிலத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கன்னட அமைப்புகள் கமலுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து, அவரின் போஸ்டர்களை கிழித்து வருகின்றனர்.
இதற்கு அரசியல் கட்சிகளும் கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா கூறுகையில், "கன்னட மொழிக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. சிறுமையான கமல்ஹாசனுக்கு அது தெரியாது." என்று விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் எதிரும், புதிருமாக உள்ள காங்கிரஸ், பாஜக ஒரே நிலைப்பாட்டில் உள்ளன.
கமல்ஹாசனுக்கு அந்த மாநில எதிர்க்கட்சியான பாஜகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கூறுகையில், "கமல்ஹாசனின் அனைத்துப் படங்களையும் கர்நாடகாவில் தடை செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். இல்லையென்றால் அவர் மன நோயாளி போல் இப்படி நடித்துக் கொண்டே இருப்பார்." என்று கூறியுள்ளார்.
கர்நாடகா பாஜக தலைவர் விஜயேந்திரா, "கலைத்துறையில் உள்ள நடிகர்கள் அனைத்து மொழிகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். கமல் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துக் கொண்டே கன்னட மொழிக்கும், கன்னடர்களுக்கும் அவமதிப்பு ஏற்படுத்தியுள்ளார்." என்று கூறியுள்ளார்.
கன்னட ஆதரவு அமைப்பினர் பலரும், "கமலின் கருத்து தேவையில்லாத ஒன்று. அவர் உடனடியாக இதுகுறித்து விளக்கமளித்து நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவருக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடையும்." என்று எச்சரித்துள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications