ரிசார்ட் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட கர்நாடக அமைச்சர்.. சாவுக்கு காரணம் என்ன?
மங்களூர்: கர்நாடக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஹெச்.எஸ்.மகாதேவ பிரசாத் திடீரென மரணமடைந்தார். அவருக்கு வயது 58.
5 முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகாதேவ பிரசாத், சித்தராமையா அரசில் கூட்டுறவு மற்றும் சர்க்கரை துறை அமைச்சராக பதவி வகித்தார்.

மதசார்பற்ற ஜனதாதள கட்சியிலிருந்தபோது, அக்கட்சி பாஜகவோடு அமைத்த கூட்டணி ஆட்சியின்போது, கன்னடம் மற்றும் கலாசாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். ம.ஜ.த கட்சியிலிருந்து பிரிந்து 2007ல் சித்தராமையாவோடு இணைந்து காங்கிரசில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
சித்தராமையாவின் நெருங்கிய நண்பராக அறியப்பட்டு வந்தவர் மகாதேவ பிரசாத். தமிழக எல்லையான, சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டல்பேட் தொகுதியிலிருந்து, 1994, 1999, 2004, 2008 மற்றும் 2013 ஆண்டுகளில் சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றவர் மகாதேவ பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிக்மகளூர் அருகேயுள்ள கொப்பா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க மகாதேவ பிரசாத் சென்றிருந்தார். அவர் சிக்மகளூரிலுள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கியிருந்த நிலையில், இரவு மரணமடைந்தார். காலையில்தான் ரிசார்ட் ஊழியர் சென்று பார்த்தபோது, அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. அமைச்சர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என கூறப்பட்டாலும், பிரேத பரிசோதனை முடிவில் காரணம் தெரியவரும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் மறைவையொட்டி, கர்நாடகாவில் 3 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பலரும் மகாதேவ பிரசாத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications