மேகதாது எங்கள் உரிமை.. அணை கட்டும் பணிகளை தீவிரப்படுத்தும் டிகே சிவகுமார்.. தமிழ்நாட்டுக்கு சிக்கல்?
பெங்களூர் : மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என கர்நாடகா துணை முதல்வரும், அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வரும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமார் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நேற்று பெங்களூரில் முதன்முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, கர்நாடக அரசின் நீர்ப்பாசன திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதியை பெற முயற்சி செய்ய வேண்டும். இது தான் நான் அமைச்சரான பிறகு உங்களுக்கு விதிக்கப்படும் முக்கியமான இலக்கு. மேகதாது, மகதாயி திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேகதாது திட்டத்திற்கு அரசு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கியது. அதை நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு பயன்படுத்தவில்லை எனத் தெரிகிறது. ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள தீவிரமாக உழைக்க வேண்டும். ஏதாவது தேவை என்றால் பிரதமர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து பேசுவேன் எனத் தெரிவித்துள்ளார் டிகே சிவக்குமார்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி மக்களுக்கு அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் விரைவில் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் கர்நாடக மாநிலத்தில் நீண்ட நாளாக நிலுவையில் உள்ள முக்கிய திட்டமான மேகதாது அணை மற்றும் மகதாயி அணை திட்டத்தை அமல்படுத்த தான் விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து அனுமதி பெற தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை கட்டுவது தங்களது உரிமை என்றும், அதுவே குறிக்கோள் என்றும் வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் தங்களுக்கு கிடையாது என்றும் கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications