கர்நாடகா: செலவிற்கு காசு இல்லை.. பிரச்சாரத்திற்காக மக்களிடம் நிதி வசூலித்த காங்கிரஸ் வேட்பாளர்
கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்காக நடந்த பிரச்சாரத்தில் யோகேஷ் பாபு என்ற காங்கிரஸ் வேட்பாளர் மக்களிடம் இருந்து நிதி வசூலித்து பிரச்சாரம் செய்துள்ளார்.
பெங்களூர்: கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்காக நடந்த பிரச்சாரத்தில் யோகேஷ் பாபு என்ற காங்கிரஸ் வேட்பாளர் மக்களிடம் இருந்து நிதி வசூலித்து பிரச்சாரம் செய்துள்ளார். செலவு செய்ய காசு இல்லாததால் இவர் மக்களிடம் நிதி வசூலித்துள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. நாளை (மே 12ம் தேதி) வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 223 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் மரணம் அடைந்துவிட்டதால், அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தது. நேற்று தான் பிரச்சாரம் செய்ய கடைசி நாள்.எல்லா கட்சியில் இருந்தும் முக்கியமான தலைவர்கள் அந்த மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கூடி பிரச்சாரம் செய்து வந்தனர். பிரதமர் மோடி கர்நாடகாவில் மொத்தம் 18 இடங்களில் மேடை அமைத்து பேசினார்.
இந்த நிலையில்தான் மொல்கல்முறு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யோகேஷ் பாபு வித்தியாசமான முறையில் நேற்று வரை பிரச்சாரம் செய்துள்ளார். மிகவும் நேர்மையான இவர் தொகுதியில் பிரச்சாரம் செய்யவும், விளம்பரம் செய்யவும் காசு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் முதலில் குழம்பி இருக்கிறார்.
இவரை எதிர்த்து அதே தொகுதியில் போட்டியிடும், பாஜகவின் ஸ்ரீராமுலு மிகவும் பணக்கார வேட்பாளர்களில் ஒருவர். இந்த தொகுதியில் அவர் வெற்றிபெற்று, பாஜக வெற்றிபெறும் சமயத்தில், கண்டிப்பாக ஸ்ரீராமுலு துணை முதல்வராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பெரிய வேட்பாளரை எதிர்த்துதான் யோகேஷ் போட்டியிடுகிறார்.
இதற்காக அவர் மக்களின் பணத்தை வைத்து, பிரச்சாரம் செய்துள்ளார். கிரவுட் பண்டிங் எனப்படும் முறையில் குழுவாக மக்களிடம் இருந்து நிதி வாங்கி பிரச்சார செலவுகளை கவனித்துள்ளார். இவர் எந்த அளவிற்கு நேர்மையானவர் என்று இந்த பிரச்சாரம் மூலம் மக்களுக்கு தெரிந்துள்ளது என்று கூறப்படுகிறது.
மொத்தமாக கிரவுட் பண்டிங் மூலம் இவருக்கு 28 லட்சம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவருக்கு மொத்தம் 220 பேர் வரை பணம் கொடுத்துள்ளனர். மொத்தமாக 5.5 லட்சம் பணம் இவருக்கு கடைசி நாள் வரை கிடைத்துள்ளது. இதை வைத்துதான் இந்த மொத்த பிரச்சாரத்தையும் இவர் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications