பயம் வந்துட்டா? கர்நாடக தேர்தலுக்காக நேபாளம் செல்லும் மோடி.. காரணம் இருக்கும் மக்களே!
கர்நாடக சட்டமன்றத்திற்கான தேர்தல் நாளை நடக்க இருக்கும் நிலையில் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று நேபாளம் கிளம்பி சென்றுள்ளார்.
Recommended Video

பெங்களூர்: கர்நாடக சட்டமன்றத்திற்கான தேர்தல் நாளை நடக்க இருக்கும் நிலையில் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று நேபாளம் கிளம்பி சென்றுள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. நாளை (மே 12ம் தேதி) வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 223 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் மரணம் அடைந்துவிட்டதால், அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தது. நேற்று தான் பிரச்சாரம் செய்ய கடைசி நாள். எல்லா கட்சியில் இருந்தும் முக்கியமான தலைவர்கள் அந்த மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கூடி பிரச்சாரம் செய்து வந்தனர். பிரதமர் மோடி கர்நாடகாவில் மொத்தம் 18 இடங்களில் மேடை அமைத்து பேசினார்.
இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நேபாளம் செல்ல இருக்கிறார். இன்று காலை அவர் நேபாளம் செல்ல உள்ளார். இது அரசு முறை பயணம் போல இல்லாமல் ஆன்மீக பயணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பயணத்தில் இவர் நிறைய கோவில்களுக்கு செல்ல உள்ளார். முக்கியமாக ஜனகாபூர் ஜானகி கோவிலுக்கு செல்ல இருக்கிறார்.
அதேபோல் தேர்தல் நடக்கும் நாளில் பசுபதி நாத், முக்திநாத் என்ற இரண்டு சிவன் கோவில்களுக்கு சென்று பூஜை நடத்த உள்ளார். இதில் பசுபதி நாத் லிங்க வடிவில் இருக்கும் சிவன் ஆகும். இதை வழிபட மிக முக்கியமான காரணம் இருக்கிறது. கர்நாடகாவில் லிங்காயத்துகள் வழிபடும் சிவ வடிவங்களில் பசுபதி நாத்தும் ஒன்று.
முக்கியமாக சில லிங்காயத்துகள் இதை தங்கள் அடையாள சின்னமாக பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது லிங்காயத்துகளுக்கு தனி மத அடையாளம் காங்கிரஸ் கட்சியின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. லிங்காயத்துகளின் வாக்குகளை கவர அவர் இப்படி முடிவெடுத்துள்ளார். இது தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும். லிங்காயத்துகளின் வாக்குகளை வாங்கவே தற்போது இரண்டு கட்சிகளும் மாற்றி மாற்றி போட்டியிட்டு கொண்டுள்ளது.
இதன் காரணமாகவே மோடி இந்த கோவிலுக்கு செல்ல இருக்கிறார். அதே சமயம், மோடிக்கு தேர்தலில் முதல் முறை பயம் வந்து இருக்கிறது என்று காங்கிரஸின் சமூக வலைதளவாசிகள் விமர்சனம் செய்துள்ளனர். மோடிக்கு பயம் வந்த காரணத்தால் முதல்முறையாக கடவுளை தேடி சென்று இருக்கிறார் என்றுள்ளனர்.
-
இட்லி, வடை, சாம்பார்.. கர்நாடகாவில் நாளை நடக்கும் மிக பெரிய அரசியல் மாற்றம்! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கர்நாடகா புது முதல்வர் யார்? டிகே சிவக்குமார் பெயரை சொல்ல மறுத்த சித்தராமையா! அழிக்கப்பட்ட மெசேஜ் -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா!












Click it and Unblock the Notifications