கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் 2018 Live: ஆதரவை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 7 நாட்கள் அவகாசம்
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
India
oi-Madhivanan
By Mathi
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் 104 இடங்களைப் பெற்ற பாஜகவின் மூத்த தலைவர் எடியூரப்பா, பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க 7 நாட்கள் அவகாசத்தை அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா அளித்துள்ளார்.
பாஜகவுக்கு நோஸ் கட்
காங்கிரஸ் கட்சியின் ஆதரவை ஏற்று ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது ஜேடிஎஸ். ஆளுநருக்கு ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி அனுப்பிய கடிதத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் ஜேடிஎஸ்ஸை வளைக்க நினைத்த பாஜகவின் முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டது.
காங். அதிரடி
கர்நாடகாவில் மே 12-ந் தேதி 222 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதுவரை இல்லாத வகையில் மிக அதிக அளவில் 72.13% வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்த வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
பெங்களூருவில் மட்டும் 5 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
May 15, 2018, 7:53 pm IST
கர்நாடகா மக்கள் பாஜகவுக்கே வாக்களித்தனர்- அமித்ஷா
May 15, 2018, 7:53 pm IST
டெல்லியில் பாஜக ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு
May 15, 2018, 7:53 pm IST
பாஜகவுக்கு 15-வது சட்டசபை தேர்தல் வெற்றி- அமித்ஷா
May 15, 2018, 7:03 pm IST
கர்நாடக மக்களுக்கு நன்றி - மோடி டிவீட்
May 15, 2018, 7:03 pm IST
பாஜகவுக்கு வாக்களித்த சகோதர, சகோதரிகளுக்கு நன்றி - மோடி
May 15, 2018, 7:03 pm IST
பாஜகவை தனிப் பெரும் கட்சியாக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி - மோடி
May 15, 2018, 7:03 pm IST
கர்நாடக பாஜகவினரின் அயராத பணிக்கு எனது நன்றிகள் - மோடி
May 15, 2018, 6:16 pm IST
சித்தராமையா, குமாரசாமி கூட்டாக பேட்டி
May 15, 2018, 6:16 pm IST
பாஜகவுக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுகிறார்
May 15, 2018, 6:13 pm IST
பாஜகவின் ஆபரேஷன் கமலா வெற்றி பெறாது- குமாரசாமி
May 15, 2018, 6:13 pm IST
கடந்த காலங்களை போல எம்.எல்.ஏக்களை வளைக்க முயற்சி
May 15, 2018, 6:09 pm IST
ஜேடிஎஸ் ஆட்சி அமைக்க காங். ஆதரவு- சித்தராமையா
May 15, 2018, 6:03 pm IST
காங்-ஜேடிஎஸ் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பு
May 15, 2018, 6:03 pm IST
எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் குமாரசாமி தலைவராக தேர்வாகிறார்
38 வாக்கு எண்ணும் மையங்களில் 50,000 பாதுகாப்பு படையினர் குவிப்பு
7:30 AM, 15 May
கருத்து கணிப்புகளில் ஜேடிஎஸ் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கும் என ஆரூடம்
7:30 AM, 15 May
இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது
7:44 AM, 15 May
224 தொகுதிகள் எனில் மெஜாரிட்டிக்கு 113 இடங்கள் தேவை
7:44 AM, 15 May
222 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றதால் மெஜாரிட்டிக்கு 112 இடங்கள் தேவை
7:52 AM, 15 May
ஆதிசுஞ்சனகிரி மடத்தில் குமாரசாமி யாகம்
JDS's HD Kumaraswamy offers prayers at Adichunchanagiri Mahasamsthana Math in Nagamangala ahead of counting of votes for #KarnatakaElections2018 . Kumaraswamy is contesting from Ramanagara and Channapatna constituencies pic.twitter.com/3usqTFsRch
காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கும்: சித்தராமையா மகன் யதீந்தரா
Senior party leaders will decide on this, but we are confident and hope to form Government on our own: Dr.Yathindra,Congress candidate from Varuna and son of CM Siddaramaiah on possibility of post poll alliance with JDS #KarnatakaElections2018pic.twitter.com/ghTqoSDYf6