பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச உங்களுக்கு தகுதியில்லை.. எடியூரப்பா, சித்தராமையா டிவிட்டர் போர்!
சட்டசபையில் ஆபாச படம் பார்த்த எம்எல்ஏக்களுக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கிய பாஜக, பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசலாமா என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா டிவிட் செய்துள்ளார்.
பெங்களூர்: சட்டசபையில் ஆபாச படம் பார்த்த எம்எல்ஏக்களுக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கிய பாஜக, பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசலாமா என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா டிவிட் செய்துள்ளார். பெண் பாதுகாப்பு பற்றிய எடியூரப்பாவின் டிவிட்டிற்கு அவர் இப்படி பதில் அளித்துள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.
இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது. பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் எதிரணியினரை வார்த்தைகள் மூலம் தாக்கிக் கொண்டுள்ளனர்.

டிவிட்டர் சண்டை
தற்போது தேர்தல் களத்தில் எப்படி பிரச்சாரம் சூடுபிடித்து இருக்கிறதோ, அதே அளவிற்கு சமூக வலைத்தளங்களிலும் விவாதம் சூடு பிடித்துள்ளது. முக்கியமாக சித்தராமையாவின் ஐந்து வருட ஆட்சியை எதிர்த்து பாஜக டிவிட்டரில் பிரச்சாரம் செய்து வருகிறது. அதே சமயம் சித்தராமையாவும், காங்கிரஸ் கட்சியின் ஐடி செல்லும் இதற்கு தொடர்ந்து பதில் அளித்து வருகிறது. இதில் சுவாரசியமான சம்பவங்களும் நடந்து வருகிறது.
|
எடியூரப்பா செய்த டிவிட்
இந்த நிலையில் எடியூரப்பா ஒரு டிவிட் செய்துள்ளார். அதில் ''சித்தராமையாவின் அரசிற்கு பெண்களின் பாதுகாப்பு எப்போதும் முக்கியமான ஒரு விஷயம் கிடையாது. ஒரு காலத்தில் பெங்களூர் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக இருந்தது. ஆனால் இப்போது இந்தியாவில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற நகரமாக பெங்களூர் மாறியுள்ளது. கர்நாடக பாஜக பெண்களின் நலனுக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.'' என்றுள்ளார்.
|
சித்தராமையா பதில்
இதற்கு சித்தராமையா பதில் அளித்துள்ளார். அதில் ''பாஜக அறிவித்து இருக்கும் வேட்பாளர் பட்டியலில், 3 பேர் சட்டமன்றத்தில் ஆபாச படம் பார்த்தவர்கள். உங்கள் பாஜக கட்சியை சேர்ந்த உத்தர பிரதேச எம்எல்ஏ வன்புணர்வு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பின்பும் அரசு அவரை பாதுகாக்கிறது, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை போலீஸ் கஸ்டடியில் மரணம் அடைகிறார். காஷ்மீர் வன்புணர்விற்கு உங்கள் கட்சியினர் ஆதரவு தெரிவிக்கிறார்கள். இதுதான் உங்களின் வரலாறு. பாஜகவில் பெண்களின் சக்தி எப்படி இருக்கும்'' என்றுள்ளார்.
|
பாஜகவினர் பெண்களுக்கு எதிரானவர்கள்
மேலும் ''உங்கள் கட்சியில் இருக்கும் அடியாட்கள் கட்சியின் அனுமதியுடன் இளம் ஆண்களையும் பெண்களையும் கலாச்சாரம் என்ற பெயரில் தாக்குகிறார்கள். பெண்கள் எப்படி ஆடை அணிய வேண்டும் என்று நீங்கள் கட்டுப்படுத்த நினைக்கிறீர்கள். உங்கள் ஆட்களிடம் இருந்து வரும் டிவிட்டுகள் எப்போதும் பெண்களை இழிவுபடுத்தி, பெண் பத்திரிக்கையாளர்களை தாக்கி அதிகம் இருக்கிறது. எப்படி உங்கள் ஆட்சியில் பெண்களுக்கு சக்தி இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?'' என்று கேள்வி கேட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications