கர்நாடக தேர்தல்: 2 வருடங்களுக்கு பின் மீண்டும் வருகிறார்.. காங்கிரஸ் பிரச்சார களத்தில் சோனியா காந்தி
கர்நாடக மாநில தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பாக சோனியா காந்தி பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
Recommended Video

பெங்களூர்: கர்நாடக மாநில தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பாக சோனியா காந்தி பிரச்சாரம் செய்ய இருக்கிறார். 2 வருடங்களுக்கு பின் அவர் இப்போதுதான் தேர்தலில் பிரச்சாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது. தேசிய தலைவர்கள், கட்சியின் முக்கியமான தலைவர்கள், மாநில முதல்வர்கள் இதனால் கர்நாடகாவில் கூடியுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது கர்நாடக மாநில தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பாக சோனியா காந்தி பிரச்சாரம் செய்ய இருக்கிறார். 2 வருடங்களுக்கு பின் அவர் இப்போதுதான் தேர்தலில் பிரச்சாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் அவர் 2016 ஆகஸ்டில் உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவருக்கு திடீர் என்று உடல்நிலை சரியில்லாமல் போனதால் பாதியில் பிரச்சாரம் செய்யாமல் வெளியேறினார். 71 வயது நிரம்பியுள்ள அவர் அதன்பின் பிரச்சாரம் செய்யவில்லை.
குஜராத் தேர்தல், திரிபுரா தேர்தல், உத்தரகான்ட், மணிப்பூர், மத்திய பிரதேசம், நாகலாந்து, பஞ்சாப், கோவா என எந்த தேர்தலிலும் அவர் பிரச்சாரம் செய்யவே இல்லை. இந்த நிலையில்தான் தற்போது கர்நாடகாவில் பிரச்சாரம் செய்ய உள்ளார். அவர் கர்நாடகாவில் பிஜப்பூர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
பிஜப்பூர் தொகுதியில் வரும் மே 8ம் தேதி பிரச்சாரம் செய்ய உள்ளார். மே 12ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் அவரது இந்த பிரச்சாரம் முக்கியத்துவம் பெறுகிறது. முக்கியமாக இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தும். இவரது பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாக்குர் உடன் இருந்து கவனிப்பார்.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications