பெங்களூர் கலவரத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்? கர்நாடக உள்துறை அமைச்சர் சந்தேகம் #bengaluru
பெங்களூர்: காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த திங்கள்கிழமை பெங்களூரில் நடந்த கலவரத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புக்கு தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்படும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் தெரிவித்தார்.
கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவராகவும் இருப்பவர் பரமேஷ்வர். தன்னிடம் சில காங்கிரஸ் நிர்வாகிகள், இந்த கோணத்தில் விசாரிக்க கோரியதாகவும், எனவே அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்படும் என்றும், பரமேஷ்வர் நிருபர்களிடம் நேற்று தெரிவித்தார்.
12ம் தேதி நடைபெற்ற கலவரத்தில் தமிழக வாகனங்கள் குறி வைத்து எரிக்கப்பட்டன. நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே 16 காவல் நிலைய சரகங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஊரடங்கு
பெங்களூர் நகரில் வரும் 25ம் தேதிவரை, 144 தடையுத்தரவு அமலில் இருக்கும் நிலையில், ஊரடங்கு உத்தரவு இரு தினங்கள் முன்பு தளர்த்தப்பட்டது. இந்த கலவரம் பெங்களூர் நகருக்கு உலக அளவில் கெட்ட பெயரை சம்பாதித்து கொடுத்துவிட்டது.

ஆர்.எஸ்.எஸ்க்கு தொடர்பா
இந்நிலையில் நேற்று நிருபர்களிடம் பேசிய பரமேஷ்வர், காங்கிரஸ் அரசாங்கத்தை கலைக்கும் நோக்கத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு அதன் துணை சங்பரிவார் அமைப்புகள் கலவரத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கலாம் என ஆலோசனை கூட்டத்தில் சிலர் தெரிவித்தனர். எனவே அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்படும் என்றார்.

சுயலாபம்
காவிரி கலவரத்தை, சமூக விரோதிகள் தங்கள் சுய லாபத்திற்காக பயன்படுத்திக்கொண்டதாக போலீசாருக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. நிறுவ உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவங்கள் அரங்கேறின. கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவங்களை கன்னட பத்திரிகையொன்று சிசிடிவி ஆதாரங்களோடு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆர்.எஸ்.எஸ் மறுப்பு
இதனிடையே, ஆர்எஸ்எஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தங்கள் திறமையின்மையை மறைப்பதற்காக, சில அரசியல் தலைவர்கள் பிறர் மீது பழிபோடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கர்நாடக உள்துறை அமைச்சரும் அதே பாதையை தேர்ந்தெடுத்திருப்பது கொடுமையானது. உயர்ந்த பதவிகளில் இருப்போரிடமிருந்து திறமையான நடவடிக்கைகளைதான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான பேச்சுக்களை கிடையாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications