சொந்த செலவுக்கு மக்களின் பணம் ரூ.3.5 கோடி... கர்நாடக ஆளுநர் மீது சர்ச்சை...
பெங்களூரு : பொதுமக்களின் பணம் சுமார் மூன்றரை கோடி ரூபாயை சொந்த செலவுக்கு பயன்படுத்தியதாக கர்நாடக ஆளுநர் மீது புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த தகவலை கர்நாடக டி.வி. சேனல் ஒன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ளது.

கர்நாடக மாநில ஆளுநராக வாஜுபாய் வாலாவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு நியமித்தது. 77 வயதான அவர், இதற்கு முன் குஜராத் மாநிலத்தில் அமைச்சராக பதவி வகித்தவர்.
இந்நிலையில், வாஜுபாய் வாலா கர்நாடக மாநில ஆளுநர் பதவியேற்றது முதல் தனது ஆளுநர் மாளிகையை புதுப்பிப்பதற்காக ரூ.2.4 கோடி செலவு செய்துள்ளார். இதில் தனது அலுவலகத்தில் அலங்கார வேலைகளுக்காக செலவு செய்த 40 லட்ச ரூபாயும், மற்றொரு அலுலகத்தின் அலங்கார வேலைகளுக்காக செலவு செய்த 30 லட்ச ரூபாயும் அடங்கும்.
மேலும் ஆளுநர் மாளிகைக்குள்ளேயே தனியாக பாதை அமைக்க 35 லட்ச ரூபாயும், பிரதான கட்டடத்தில் உள்ள பாதை அகலப்படுத்த 50 லட்ச ரூபாயும், செலவு செய்துள்ளார்.
சமையலறை, உணவருந்தும் அறை, கழிவறை ஆகியவற்றை புதுப்பிக்க 50 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளார் கர்நாடக ஆளுநர்.
இது தவிர தனியாக விமானத்தை அமர்த்தி பயணம் செய்தது என 9 மாதங்களில் ரூ.3.5 கோடியை மக்கள் பணத்தில் இருந்து செலவு செய்துள்ளதாக தகவல் பெற்ற தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் ஹைலைட் என்னவென்றால் ஆளுநருக்கு தனது சொந்த வசதிக்காக செலவு செய்ய உரிமை உள்ளது என்று முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கூறியது தான்...
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications