Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விநாயகர் ஊர்வலத்தில் மோதல் தற்செயலாக நடந்தது.. மத கலவரம் இல்லை.. சொல்வது கர்நாடகா உள்துறை அமைச்சர்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநிலம் நாகமங்கலா நகரில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்த நிலையில், "நடந்தது மதக்கலவரம் அல்ல. தற்செயலாக நடந்த சம்பவம்." என கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த 7 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். அதேபோல், பொது இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் படரிகொபலு என்ற கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை அப்பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று இரவு நீர்நிலையில் கரைக்க ஊர்வலமாக எடுத்துச்சென்றனர்.

Karnataka Home Minister says that ganesh procession violence took place accidentally

நாகமங்களா என்ற பகுதியில் மசூதி அமைந்துள்ள பகுதி அருகே ஊர்வலம் சென்றபோது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையானது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

மேலும் சாலையின் இருபுறமும் இருந்த தள்ளுவண்டி கடைகள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். ஒரு கும்பல் மண்டியா சர்கிள் பகுதியில் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். மோதல் சம்பவத்தை அடுத்து நாகமங்களாவில் உடனடியாக 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.

தொடர்ந்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். , கல்வீச்சு மற்றும் நாச வேலைகளால் 6 கடைகள் தீயில் எரிந்து முழுமையாக நாசமடைந்ததாகவும், 13 கடைகள் சேதமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தக் கலவரம் தொடர்பாக 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாண்டியா மாவட்டம் நாகமங்கலா நகரில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாக 52 பேர் கைது செய்யப்பட்டதாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, "நாகமங்கலா நகரில் நடந்தது மதக்கலவரம் அல்ல. தற்செயலாக நடந்த சம்பவம். விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது கல் வீச்சு சம்பவம் நடந்தது. இரு பிரிவினருடன் மோதல் ஏற்பட்டது. மோதலின் போது, ​​​​ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி எறிந்து தாக்கிக் கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 52 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று பாஜக தலைவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். காவல்துறையிடம் விட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். சட்ட ஆலோசனை வழங்கட்டும். காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர். தேவைப்பட்டால், சம்பவ இடத்தை நேரில் பார்வையிடுவேன்." என்று கூறினார்.

முன்னதாக, கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் "ஆபத்தான அரசியலின்" விளைவுதான் இந்தச் சம்பவம் என்று விமர்சித்த பாஜக, இந்த விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியது. பாஜகவின் கூட்டணிக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான எச்.டி.குமாரசாமியும் மாநில அரசு மீது குற்றம்சாட்டினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+