For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அன்று சசிகலாவை அம்பலப்படுத்தினார்.. இன்று சப்பாத்திக்குள் பணம்.. அதிர வைக்கும் கர்நாடக டிஐஐி ரூபா

பணம் பட்டுவாடா குறித்து ரூபா ஐபிஎஸ் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: "சப்பாத்தியில் கூட பணத்தை வெச்சு விநியோகம் செய்வார்கள்" என்று தேர்தலில் பணப்பட்டுவாடா எப்படியெல்லாம் நடக்க சான்ஸ் உள்ளது ரூபா ஐபிஎஸ் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.

விரைவில் தேர்தல் வரப்போகிறது. இந்தியாவே தீவிர பிரச்சாரத்தில் சூடு பிடித்துள்ளது. ஆங்காங்கே இவ்வளவு பிடிச்சோம், அவ்வளவு பிடிச்சோம் என்று தேர்தல் பறக்கும் படையினர் பகீர்களை கிளப்பி வருகிறார்கள்.

எப்படி இருந்தாலும் பண விநியோகம் சரளமாக, தாராளமாக நடந்து கொண்டிருப்பதாகதான் பொதுவாக சொல்லப்பட்டு வருகிறது.

ரூபா ஐபிஎஸ்

ரூபா ஐபிஎஸ்

இந்நிலையில், ரூபா ஐபிஎஸ் இது சம்பந்தமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். ரூபா ஐபிஎஸ், கர்நாடக சிறைத் துறையின் முதல் பெண் டிஐஜி என்பதும், பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகளுக்கு சசிகலா லஞ்சம் கொடுத்ததை அம்பலப்படுத்தியவர் இவர்தான் என்பதையும் நாட்டு மக்கள் சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டார்கள்.

<strong>EXCLUSIVE:</strong> பரமக்குடியை கலக்கிய EXCLUSIVE: பரமக்குடியை கலக்கிய "உள்ளே வெளியே" .. அரசியல்வாதிகள் வெட்கப்பட வேண்டும் இதை பார்த்து

கவனிக்கவும்

ரூபாவின் ட்விட்டர் பக்கத்தில் சப்பாத்திக்குள் ரூபாய் நோட்டை மறைத்து விநியோகம் செய்யும் முறையை அம்பலப்படுத்தி உள்ளார். "வாக்காளர்களை கவர பயன்படுத்தும் நூதன வழிகள் இவை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிக்கவும்" என்று பதிவிட்டுள்ளார்.

ஒற்றைத்தாள்

ஒற்றைத்தாள்

அது தொடர்பான வீடியோ ஒன்றும் உள்ளது. அதில், ஒரு பெண் சப்பாத்தி செய்கிறார். மாவை எடுத்து திரட்டும்போது அதில் ஒற்றைத்தாள் பணத்தை வைத்து தேய்க்கிறார். அடுப்பில் உள்ள கல்லில் சப்பாத்தியை திருப்பி திருப்பி போட்டு சுட்டு எடுக்கிறார். சுட்டு எடுத்த சப்பாத்தியை பிரித்து பார்த்தால், உள்ளே இருந்து ரோஸ் கலர் நோட்டை வெளியே எடுக்கிறார்.

சப்பாத்தி

சப்பாத்தி

அதாவது புதிதாக மோடி நமக்கு அறிமுகப்படுத்தினாரே.. அந்த 2000 ரூபாய் நோட்டைதான் வெளியே எடுத்து காட்டுகிறார். சப்பாத்தியில் வைத்து சுட்டும் ரூபாய் நோட்டு எதுவுமே ஆகவில்லை. பார்க்கவே ஃபிரஷ்ஷாக இருக்கிறது.

English summary
Karnataka IPS D.Roopa releases video of ingenious ways of luring voters in MP Election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X