கர்நாடகா முதல்வராக குமாரசாமி பதவியேற்பு: ரஜினிக்கு போனில் அழைப்பு
கர்நாடகா முதல்வராக குமாரசாமி பதவியேற்கவுள்ள விழாவுக்கு வருகை தருமாறு ரஜினிகாந்துக்கு போனில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video

பெங்களூர்: கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்கவுள்ள விழாவுக்கு ரஜினியை பங்கேற்குமாறு குமாரசாமி போனில் அழைத்துள்ளார்.
கர்நாடகா முதல்வராக குமாரசாமி நாளை பதவியேற்று கொள்கிறார். இந்த விழாவில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு குமாரசாமி அழைப்பிதழ் அனுப்பியுள்ளார்.

அதன்படி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபாரூக் அப்துல்லா, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒரிஸா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அஸ்ஸாம் முத்லவர் பிரபுல்லா குமார் மஹான்தா, மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி. ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ள வேண்டும் என்று குமாரசாமி அவருக்கு போன் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். இரு தினங்களுக்கு முன் ரஜினி பேட்டி அளித்தபோது புதிதாக பதவியேற்கும் காங்கிரஸ்- ஜேடிஎஸ் அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதிலடியாக குமாரசாமி நேற்று கூறுகையில், ரஜினி கர்நாடகாவுக்கு வந்து அணைகளை பார்வையிடட்டும், தண்ணீர் இருந்தால் அவராகவே திறந்து விடட்டும். நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று கூறியிருந்த நிலையில் ரஜினிக்கு குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications