நடு ரோட்டில் தண்ணியைப் போட்டு ஆட்டம்.. அமைச்சரின் மகனுக்கு சரமாரி அடி உதை!
பெங்களூரு: கர்நாடக மாநில வனத்துறை அமைச்சர் ரமாநாத் ரய்யின் மகன் தீபு ரய் மற்றும் அவரது நண்பர்கள் குடித்து விட்டு நடு ரோட்டில் கலாட்டா செய்ததால் ஆவேசமடைந்த பொதுமக்கள் அவர்களை சரமாரியாக அடித்துத் துவைத்து விட்டனர்.
குடகு மாவட்டம் ஸ்ரீமங்களா என்ற இடத்தில் இந்தக் கூத்தும் சம்பவமும் நடந்துள்ளது. அவர்கள் ஆடிப் பாடி அட்டகாசம் செய்தது தனியார் சாலைதான் என்றாலும் கூட அவர்களால் அப்பகுதியின் அமைதி கெட்டுப் போனதால்தான் மக்கள் ஆவேசமடைந்து விட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனஆல் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அதேசமயம், தீபு மற்றும் அவரது நண்பர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வனத்துறை அமைச்சர்
கர்நாடக மாநில வனத்துறை அமைச்சராக இருப்பவர் ரமாநாத் ரய். இவரது மகன் தீபு ரய். சொந்த ஊர் குடகு மாவட்டமாகும். ஞாயிற்றுக்கிழமையன்று தீபு ரய் தனது நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி கொண்டாடியுள்ளார்.

ஆபாச ஆட்டம்- ரகளை
தனியாருக்குச் சொந்தமான சாலையில் இவர்கள் குடித்துக் கூத்தடித்துள்ளனர். சத்தமாக கத்தியும், அங்கிருந்தவர்களை டிஸ்டர்ப் செய்யும் வகையிலும் நடந்து கொண்டனர்.

ஆவேசத் தாக்குதல்
இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அமைதியாக பார்ட்டி நடத்துமாறு முதலில் கூறியுள்ளனர். ஆனார் ரய் மற்றும் அவரது நண்பர்கள் கேட்கவில்லை. தொடர்ந்து சேட்டை செய்துள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் தர்ம அடியில் இறங்கினர்.

செம அடியாம்
தீபு, அவரது நண்பர்கள் தேஜாஸ், கணேஷ் ஆகியோருக்கு பொதுமக்கள் செமத்தியாக அடி கொடுத்துள்ளனர். தப்பி ஓட முயன்றவர்களையும் பிடித்து வைத்துக் கொண்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

மண்டமடா வீட்டில் ரகளை
இந்தக் கும்பல் குடித்து விட்டு உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர் மண்டமடா தேஜப்பாவின் வீட்டுக்குப் போய் ரகளை செய்ததால்தான் கிராமத்தினர் கொந்தளித்து விட்டனர்.
போலீஸார் தற்போது தீபு உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications