திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா மேடையில் செல்போனில் ஆபாச படம் பார்த்த கர்நாடக அமைச்சர்
பெங்களூர்: திப்பு சுல்தான் பிறந்த நாள் நிகழ்ச்சி மேடையில் வைத்தே, ஆபாச படம் பார்த்த கர்நாடக அமைச்சரால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மைசூர் புலி என அழைக்கப்படும் திப்பு சுல்தானின் பிறந்த நாளை கர்நாடகத்தில் அமைந்துள்ள சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த வருடம் முதல் அரசு விழாவாக கொண்டாடி வருகிறது.

திப்பு பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது பாஜக. எதிர்ப்பை மீறி நேற்று மாநிலம் முழுக்க பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
ரெய்ச்சூர் நகரில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில், துவக்க கல்வி அமைச்சர் தன்வீர் சேட், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழா மேடையில் இருந்தவாரே, அவர் செல்போனில் ஆபாச படங்களை பார்த்துள்ளார். இந்த காட்சி டிவி சேனல் வீடியோகிராபர்களால் படம் பிடிக்கப்பட்டு, ஒளிபரப்பப்பட்டது.
இதனால் மாநில அரசியலில் சர்ச்சை வெடித்துள்ளது. உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் மற்றும் முதல்வர் சித்தராமையா, இதுதொடர்பாக அமைச்சர் தன்வீர் சேட்டிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications