வெளிநாடு போகணும்... சுப்ரீம் கோர்ட்டில் பெர்மிசன் கேட்ட கார்த்தி சிதம்பரம்
ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் ஆஜராக வேண்டிய நிலையில் வெளிநாடு செல்ல அனுமதி கோரி உள்ளார் கார்த்தி சிதம்பரம்.
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை நேரில் ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பி உள்ள நிலையில், வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தனது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி, ஐஎன்எக்ஸ் மீடியா என்கிற நிறுவனம் அந்நிய முதலீடு பெற அனுமதி வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த விவகாரத்தில் பல முறைக்கேடுகள் நடந்து இருப்பதாகவும், இந்த வழக்கு சார்பாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் இயக்குநர்களான பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகிறது.
இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கண்காணிக்கப்படும் நபராக உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. இந்நிலையில், ஜனவரி 11ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதனையடுத்து, தான் தொழில் விஷயமாக வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல வேண்டி இருப்பதால் இந்த வழக்கில் இருந்து நேரில் ஆஜராக தனக்கு விளக்கு அளித்தும், ஜனவரி 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை வெளிநாடு செல்லவும் அனுமதி அளிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்கு வருகிற 8ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட உள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications