காஷ்மீர்: வெடிபொருட்கள் வெடித்ததில் பக்கத்து வீடுகளுக்குள் சிதறி விழுந்த உடல் பாகங்கள்.. வீடியோ
காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் புறநகர்ப் பகுதியிலுள்ள நவ்காம் காவல் நிலையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் பலியாகினர். மேலும் 25 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் மேலும் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் வெடிபொருட்கள் வெடித்து சிதறிய சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் அந்த காவல் நிலையம் முழுவதும் பெரிய தீப்பிழம்பு ஏற்பட்டது. வெடிவிபத்தின்போது பல பொருட்கள் 300 மீட்டர் தூரத்துக்கு சிதறி விழுந்தன. சிலரது உடல் பாகங்களும் பக்கத்து வீடுகளுக்குள் சிதறி விழுந்துள்ளதாம்.

நவ்காம் காவல் நிலையம்
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது நவ்காம் காவல் நிலையம். நவ்காம் காவல் நிலையத்தில் நேற்று வழக்கம் போல் போலீசார் மற்றும் தடயவியல் ஆய்வாளர்கள் பணியில் இருந்தனர். இரவு திடீரென அந்த காவல்நிலையத்தில் இருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டது.
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த காவல் நிலையம் தீப்பிழம்பை கக்கியபடி எரிந்து கொண்டிருந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் என்ன நடந்ததோ, என அச்சமடைந்தனர். உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
சிசிடிவி வீடியோ காட்சிகள்
அந்த பகுதி முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடன் அப்பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 8 பேர் பலியாகினர். 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்தது. தொடர்ந்து மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
பயங்கரவாத அமைப்பு தொடர்பான வழக்கில் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட 3,000 கிலோ வெடிபொருட்களை இந்த காவல் நிலையத்தில் தான் வைக்கப்பட்டு இருந்தது. இதனை நேற்று தடயவியல் அதிகாரிகள் குழு ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது தான் வெடிபொருட்கள் வெடித்து இந்த சம்பவம் நேரிட்டுள்ளது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
சிதறி விழுந்த உடல் பாகங்கள்
இதில், காவல்துறையினரும் தடயவியல் குழு அதிகாரிகளும் வெடிபொருட்களை ஆய்வு செய்துகொண்டிருந்தபோது இந்த அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டது. மற்றொரு வீடியோ காட்சியில், வெடி விபத்து நடந்த இடத்திலிருந்து அதிகளவினான புகை வருவதையும், தீயணைப்புப் படையினர் போராடி தீயை அணைக்கும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.
மற்றொரு வீடியோ காட்சியில், வெடிபொருட்கள் வெடித்து சிதறும் போது பெரிய தீப்பிழம்பு ஏற்பட்டது போன்றும், அப்பகுதி முழுவதும் பொருட்கள் நாலாபுறமும் சிதறி கிடப்பது போன்றும் பதிவாகி இருந்தது. இதில் சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள பக்கத்துத்து வீடுகள் மீதும் சிலரது உடற்பாகங்கள் தெறித்து விழுந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெடிபொருட்கள் வெடித்து சிதறும் போது அந்த சத்தத்தினை சுமார் 15 கிலோமீட்டருக்கும் அப்பால் வசித்த சில குடியிருப்பாளர்கள் உணர்ந்ததாகக் கூறினர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications