தொடரும் காஷ்மீர் துயரம்... ராணுவம் சுட்டதில் இளைஞர் பலி... இறப்பு எண்ணிக்கை 69 ஆனது
ஸ்ரீநகர்: ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னர், வடக்கு காஷ்மீர் பகுதியில் ராணுவம் சுட்டதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இதனையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.
காஷ்மீரில் கடந்த 9ம் தேதி புர்கன் வானி கொல்லப்பட்டதையடுத்து அங்கு அமைதியின்மை நிலவி வருகிறது. அங்கு போராட்டக்காரர்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே நடைபெறும் சண்டையில் இதுவரை 69 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அமைதியை ஏற்படுத்த காஷ்மீர் எதிர்க்கட்சித் தலைவரான ஓமர் அப்துல்லா டெல்லி வந்து ஜனாதிபதி பிராணப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக காஷ்மீர் சென்று பல்வேறு தரப்பினரோடு ஆலோசனை நடத்திவிட்டு வந்தார்.
இதனையடுத்து காஷ்மீரில் பல்வேறு பகுதிகளில் படிப்படியாக ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டு அமைதி திரும்பிக் கொண்டிருந்தது.
இந்நிலையில், காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள லடூரா என்ற கிராமத்திற்கு ராணுவத்தினரும் போலீசாரும் சோதனைக்காக சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள இளைஞர்கள் ராணுவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் சுட்டத்தில் தனிஷ் மன்சூர் என்ற இளைஞர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து காஷ்மீரில் பலி எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.
காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பிறகு நடந்த முதல் பலி தனிஷ் மன்சூர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications