நானும் ரவுடிதாண்டா.. மோதிப் பார்ப்போமா.. மார்க்கண்டேயே கட்ஜு அதிரடி! #katju
டெல்லி: மார்க்கண்டேய கட்ஜுவும்,. அவரது அலப்பறைகளும் என்ற பெயரில் ஒரு பெரிய படமே எடுக்கலாம். டிவிட்டரைப் பார்த்தாலும் சரி, பேஸ்புக் பக்கம் போனாலும் சரி இந்த "ஜட்ஜு" அக்கப்போர் தாங்க முடியவில்லை.
இந்தியாவில் உள்ள அத்தனை மொழிக்காரர்களையும் வண்டை வண்டையாக திட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு இனத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை. மலையாளிகளையும், கேரளாவையும் மட்டுமே அவருக்குப் பிடித்திருக்கிறது. மற்றவர்களெல்லாம் ஏதோ சாக்கடை என்பது போலவே அவர் பாவிக்கிறார், பேசுகிறார், திட்டுகிறார், கொட்டுகிறார்.
சமீபத்தில் கூட ஒடிஷாக்காரர்களை ரொம்பக் கேவலமாக விமர்சித்து இப்போது தொடர்ந்து வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார். வடிவேலு படத்தில் காதில் ரத்தம் வருவது போல கட்ஜு காதிலும் கண்டிப்பாக "பிளட்" வந்திருக்கும். அப்படி பச்சை பச்சையாக திட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஒடிஷாக்காரர்கள்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளார் கட்ஜு. மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியை வம்புக்கு இழுத்துள்ளார் கட்ஜு. பாகிஸ்தான் நடிகர் நடிகையரை வெளியேறக் கூறி வருகிறது சேனா. இதையொட்டி அவர் டிவிட்டரில் அனல் கிளப்பியுள்ளார்.
|
நானும் பெரிய ரவுடிதான்
முதல் டிவிட்டில், மகாராஷ்டிர நவ நிர்மான் கட்சியினர் ரவுடிகள். அரபிக் கடலின் உப்புத்தண்ணீரைக் குடித்து வளர்ந்தவர்கள். நான் அலகாபாத் ரவுடி. சங்கம் (திரிவேணி சங்கமத்தைச் சொல்கிறார்) தண்ணீரைக் குடித்து வளர்ந்தவன்.
|
முடிஞ்சா மோதிப் பார்
அடுத்த டிவிட்டில், எனவே உனக்குத் தைரியம் இருந்தா அந்த அப்பாவிக் கலைஞர்களுடன் (பாகிஸ்தான் நடிகர் நடிகையர்) மோதுவதை விட்டு என்னுடன் வந்து மோது. நான் ரெடியாக இருக்கிறேன். யார் பெரிய ரவுடி என்பதை பார்த்து விடுவோம்.
|
வெட்கம் கெட்ட பால் தாக்கரே
அடுத்து இன்னொரு டிவிட் போட்டுள்ளார். அதில் மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேவை வெளுத்து வாங்கியுள்ளார். நாட்டில் உள்ள மோசமான அரசியல்வாதிகளிலேயே முக்கியமானவர் பால் தாக்கரே. அவர் மிகப் பெரிய வெட்கம் கெட்டவர் என்று பச்சையாகவே திட்டியுள்ளார் கட்ஜு.
|
ஒரு பயலையும் விட மாட்டேன்
கட்ஜு முன்பு போட்ட ஒரு டிவிட்டில், இந்தியாவில் உள்ள அத்தனை மாநில மக்களுக்கும் நகைச்சுவை உணர்வு வர வேண்டும்.அதுவரை யாரையும் விட மாட்டேன். திட்டிக் கொண்டே இருப்பேன் என்று போட்டுள்ளார்.
|
ஏழுகொண்டலவாடா கோவிந்தா கோவிந்தா!
அதை விட இதுதான் ஹைலைட்.. இந்தியாவிலேயே தெலுங்குக்காரர்கள்தான் பெஸ்ட் என்று கூறியுள்ள கட்ஜு, தெலுங்கர் ஒருவர் போட்டுள்ள போஸ்ட்டை மேற்கோள் காட்டியுள்ளார். அதில், கட்ஜு சார் எல்லாரையும் திட்டிட்டீங்க. தெலுங்குக்காரர்களை மட்டும் திட்டவே இல்லை. தயவு செஞ்சு திட்டுங்க என்று போட்டுள்ளார்.
ஆத்தாடி.. பயந்து வருதேய்யா!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications