"விருஷ்கா" திருமணம்... ஊருக்கே தெரிந்த விஷயம்... இந்த நடிகைக்கு தெரியாதாமே?
விராத் கோஹ்லி- அனுஷ்கா சர்மா திருமணம் குறித்து ஊருக்கே தெரிந்த விஷயம் அவருடன் நடிக்கும் கத்ரினா கைஃப்புக்கு தெரியாதாம்.
Recommended Video

மும்பை: விராத் கோஹ்லி திருமணம் குறித்து நாடே அறிந்து கொண்டுள்ள நிலையில் அனுஷ்கா சர்மாவுடன் அடுத்த படத்தில் நடிக்கும் கத்ரினா கைஃப்புக்கு தெரியாதது அதிர்ச்சியாக உள்ளது.
கடந்த ஓராண்டாக கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியும் ,பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்தனர். பல்வேறு இடங்களில் ஜோடியாக சுற்றித் திரிந்தனர்.
எனினும் இவர்கள் தங்களது காதலிப்பதை மறுத்து வந்தனர். இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர் உள்ளிட்ட சில வதந்திகளுக்கு மத்தியில் இருவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது.

நெருங்கிய உறவினர்கள் மட்டும்
இந்நிலையில் விராத் கோஹ்லி - அனுஷ்கா சர்மாவுக்கு கடந்த வாரம் இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

வரவேற்பு நிகழ்ச்சி
இருவரும் தேனிலவுக்காக ஐரோப்பா நாட்டில் உள்ள நிலையில் மும்பையிலும், டெல்லியிலும் இரு திருமண வரவேற்புகளை நடத்தவுள்ளனர். இதைத் தொடர்ந்து புத்தாண்டை தென்னாப்பிரிக்காவில் கொண்டாடுகின்றனர்.

வாழ்த்துகள்
இவர்களது திருமணம், விராத் கோஹ்லியின் மோதிரம் பரிசு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் இவர்களது திருமணம் குறித்து ஒரு நடிகை தனக்கு தெரியாது என்கிறார்.

திருமணம் தெரியாது
அனுஷ்கா சர்மாவுடன் ஜப் தக் ஹை ஜான் என்ற படத்தில் கத்ரினா கைஃப் நடிக்கவுள்ளனர். ஆனால் அவருக்கு இவர்களது திருமணம் குறித்தே தெரியாது என்ற பகீர் தகவலை தெரிவித்துள்ளார். நாடே தெரிந்து கொண்டுள்ள நிலையில் தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.

வாழ்த்துகள்
விருஷ்கா திருமணம் குறித்து லேட்டாக தெரிந்து கொண்ட கத்ரினா கூறுகையில், எனக்கு அவர்களது திருமணம் குறித்து தெரியாது. எனினும் அவர்களது திருமணம் அழகாக நடந்தேறியிருக்கும் என்று நம்புகிறேன்.திருமண புகைப்படங்களையும், திருமண வீடியோக்களையும் பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது. நிறைய அன்புகளுடன் நன்றாக வாழ வாழ்த்துகிறேன் என்று கத்ரினா கைஃப் கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications