கைது பயத்தில் காவ்யா மாதவன்... பேஸ்புக் கணக்கையே மூடிவிட்டு ஓட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம் : நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல மலையாள நடிகர் திலீப்பின் மனைவிக்கு முகநூலில் சிலர் மோசமான கருத்துகளை பதிவிட்டு வருவதால் அவர் முகநூல் கணக்கை முடக்கம் செய்துள்ளார்.

நடிகை பாவனாவை ஆட்களை வைத்து காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் நடிகர் திலீப் கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்டார். நடிகர் திலீப்பிற்கு எதிராக 19 ஆதாரங்கள் சிக்கியதால் அவரை கைது செய்வதாக போலீசார் கூறினர்.

 Kavya Madhavan, the popular actress has reportedly quit Facebook.

இந்த வழக்கில் சிறையில் உள்ள திலீப்பின் மனைவியும் மலையான நடிகையுமான காவ்யா மாதவனும் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. இதனால் கைது பயத்தில் வீட்டிலேயே முடங்கியுள்ளார் காவ்யா மாதவன். நடிகர் திலீப் அவரின் முதல் மனைவி மஞ்சுவாரியரை விவாகரத்து செய்து விட்டு கடந்த 2016ம் ஆண்டு காவ்யா மாதவனை தனது மகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

காவ்யா மாதவனும் ஏற்கனவே நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்து விவகாரத்து பெற்றவர். இந்நிலையில் திலீப்பின் கைதையடுத்து திலீப்பின் மனைவி காவ்யா மாதவனின் ஃபேஸ்புக் பக்கத்தில், சிலர் மோசமான கமென்ட்டுகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். திலீப் நடித்து வெளியான 'வெல்கம் சென்ட்ரல் ஜெயில்' என்ற திரைப்படத்தின் மீம்ஸ்களைப் போட்டும் திலீப்பை கலாய்கிறார்கள்.

இதனால் தன்னுடைய முகநூல் பக்கத்தை காவ்யாமாதவன் முடக்கியுள்ளார். மேலும் ஆன்லைனில் தணிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் காவ்யாக மாதவன் லக்ஷய் என்ற ஆன்லைன் ஆடையக ஸ்டோர் முகநூல் பக்கத்தையும் முடக்கியள்ளார். அண்மையில் கொச்சியில் உள்ள இந்த ஸ்டோரிலும் போலீசார் சோதனை நடத்தி அங்கிருந்து திலீப்பிற்கு எதிரான வலுவான ஆதாரங்களை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kavya deactivated her official Facebook page, after the arrest of her husband, 'Janapriyanayakan' Dileep.
Please Wait while comments are loading...