For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓ காட்.. அப்ப நம்ம "அம்மா" சூப்பர் சி.எம். இல்லையா?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் உள்ள முதல்வர்களில் யார் சூப்பர் முதல்வர் என்ற ரகசிய சர்வேயை மத்திய அரசு நடத்தியுள்ளதாம். அதில் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் கடை நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. முதல் இடத்தில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் பெயர் உள்ளதாக சொல்கிறார்கள்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பெயர் 5வது இடத்தில் இருக்கிறதாம்.பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிந் பேரில் இந்த ஆய்வை நடத்தியுள்ளனராம். டெல்லியில் 16ம் தேதி நடைபெறவுள்ள பிரதமர் தலைமையிலான அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தில் இந்த முடிவை பிரதமரே அறிவிப்பார் என்கிறார்கள்.

இந்தப் பட்டியலில் டாப் 10க்குள் கெஜ்ரிவாலும் இருக்கிறார். ஆனால் அதில் முதல்வர் ஜெயலலிதா பெயர் இல்லை என்பதுதான் விசேஷமானது.

நாட்டின் சிறந்த முதல்வர்

நாட்டின் சிறந்த முதல்வர்

நாட்டிலேயே சிறந்த முதல்வராக சந்திரசேகர ராவ் திகழ்வதாக இந்த ஆய்வு கூறுகிறதாம். மத்திய அரசன் நிதியுதவி, திட்டங்களை மிகச் சரியான முறையில் தெலுங்கானா அரசு செயல்படுத்துகிறதாம். தெலுங்கானா மாநில அரசும் மிகச் சிறந்த வகையி்ல் திட்டமிட்டு செயல்படுகிறதாம்.

5வது இடத்தில் யார்

5வது இடத்தில் யார்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 5வது இடத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேசமயம், கெஜ்ரிவால்தான் 5வது இடத்தில் இருப்பதாக இன்னொரு தகவல் கூறுகிறது.

கே.சி.ஆரின் திட்டங்கள்

கே.சி.ஆரின் திட்டங்கள்

மிஷன் காகதீயா, ஹரிதா ஹரம், மிஷன் பாகீரதா உள்ளிட்ட திட்டங்களை தெலுங்கானா அரசு செயல்படுத்துகிறதாம். இந்தத் திட்டங்கள்தான் ராவை நம்பர் ஒன் முதல்வராக்கியுள்ளதாம்.

அது என்ன பாகீரதா

அது என்ன பாகீரதா

பாகீரதா என்பது, ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் வசதியை அளிக்கும் திட்டமாகும்.இது 2018ல் நிறைவடையும். ரூ. 40,000 கோடி செலவில்இதை அமல்படுத்தியுள்ளது ராவ் அரசு.

நீர்நிலைகள்

நீர்நிலைகள்

அடுத்து நீர் நிலைகள் அனைத்தையும் தூர் வாரும் பிரமாண்டத் திட்டத்தையும் சந்திரசேகர ராவ் அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் காட்டின் அளவையும் அதிகரிக்கும் திட்டத்தையும் ராவ் அரசு செயல்படுத்தி வருகிறது.

2வது இடத்தில் சவுகான்

2வது இடத்தில் சவுகான்

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் 2வது இடத்திலும்,சத்திஷ்கர் முதல்வர் ரமன் சிங் 3வது இடத்திலும், குஜராத் முதல்வர் ஆனந்தி பென் படேல் 4வது இடத்திலும் உள்ளனராம்.

அப்ப நம்ம

அப்ப நம்ம "அம்மா"??

ஆனால் இந்தப் பட்டியலில் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் எந்த இடத்தில் உள்ளது என்று தெரியவில்லை. கடைசி நிலையில் இருப்பதாக ஒரு செய்தி கூறுகிறது.

English summary
Accroding to a survey conducted by the union govt, Telanagana CM KCR has emerged as the Super CM of the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X