படுக்கை வசதியுடன் தெலுங்கானா முதல்வர் வாங்கிய குண்டு துளைக்காத பஸ்.. விலை ரூ.5 கோடி!
ஹைதராபாத்: படுக்கைவசதியுடன் கூடிய குண்டு துளைக்காத நவீன பஸ்சை தனது பயன்பாட்டுக்காக வாங்கியுள்ளார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். எதிர்பார்த்ததை போலவே எதிர்க்கட்சிகளிடமிருந்து இதற்காக எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
ஆந்திராவிலிருந்து பிரித்து, புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தின் முதலாவது முதல்வர் என்ற பெருமையுடன் அரியணை ஏறியுள்ளார் கே.சந்திரசேகரராவ். அவ்வப்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன், பங்காளி சண்டையி்ல ஈடுபட்டாலும், மாநிலத்தை பல வகைகளில் முன்னேற்ற திட்டங்களை கொண்டுவர முனைப்பு காட்டுகிறார்.

இந்நிலையில், தான் பயணிக்க, ரூ.5 கோடி செலவில், குண்டுதுளைக்காத நவீன பஸ் ஒன்றை அரசு செலவில் வாங்கியுள்ளார் ராவ். மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனத்தின் இந்த பஸ்சை, துப்பாக்கி குண்டுகளால் துளைக்க முடியாது. குண்டுகளால் தகர்க்க முடியாது.

பஸ் உள்ளே, பாத்ரூம், கழிவறை, மீட்டிங் ஹால், படுக்கையறை, இணையம் என சகல வசதிகளும் உள்ளன. குடிநீர் வினியோக திட்டம் சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை நேரில் சென்று கண்டறிய உள்ளாராம் ராவ். இதற்காக மாதத்தில் 10 நாட்களாவது இந்த பஸ்சில் மாநிலமெங்கும் சுற்றப்போகிறாராம். எனவேதான் இந்த பாதுகாப்பு வாகனம் அவசியப்பட்டுள்ளது என்கிறது அரசு தரப்பு.

அதேநேரம், எதிர்க்கட்சியான காங்கிரசின் தலைவர் ஹனுமந்தராவோ, இதை அநாவசிய செலவு என கூறுகிறார். இந்த பணத்தை ஏழைகள் நலத்திட்டத்திற்காக கொடுத்திருக்கலாம் எனவும், தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாதுகாப்பு இல்லாமல்தானே சந்திரசேகரராவ் மாநிலம் முழுவதும் சுற்றித்திரிந்தார், இப்போதும் அப்படியே செல்லட்டும் என்றும் ஹனுமந்தராவ் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications