'சைட்' அடிக்கும் ஆண்களின் கண்களைப் பிடுங்குவோம்: சந்திரசேகரராவ் அடுத்த அதிரடி
ஹைதராபாத்: ஈவ்டீசிங் செய்யும் ஆண்களை தண்டிக்கும் வகையிலும், பெண்களை வன் கொடுமை செய்தால் வளைகுடா நாடுகளில் இருப்பது போல கடுமையான சட்டம் கொண்டு வரவும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண்களை கொஞ்சம் உற்றுப் பார்த்தாலே கண்களை பிடுங்குவோம் என்றும் சந்திசேகரராவ் அதிரடியாக அறிவித்துள்ளார்.
டெல்லிக்கு அடுத்த படியாக ஹைதராபாத்தில் தான் பெண்கள் மீதான வன்கொடுமை அதிகமாக நடப்பதாக சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பில் தெரிய வந்தது.
குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் கிராமத்து இளம்பெண்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதனை முற்றிலும் தடுக்கும் வகையில், ஈவ்டீசிங் செய்யும் ஆண்களை தண்டிக்கும் வகையில் கடுமையான சட்டம் கொண்டு வர தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் திட்டமிட்டு உள்ளார். இதற்கான நடவடிக்கையில் தெலுங்கானா அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில்
பெண்கள் வன்கொடுமைகளை தடுப்பதில் முதல்வர் சந்திரசேகர ராவ் தீவிரமாக உள்ளார். வன்கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாப்பது குறித்து ஆய்வு செய்ய மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பூணம் மால கொண்டையா தலைமையில் ஒரு குழுவை தெலுங்கானா அரசு நியமித்துள்ளது.

ஆய்வு செய்த அதிகாரிகள்
இக்குழு குஜராத், கேரளா, கோவா ஆகிய மாநிலங்களுக்கு சென்று ஆய்வு நடத்தியது. அங்குள்ள சட்ட திட்டங்களை அறிந்து அரசுக்கு அறிக்கை ஒன்றை அளித்தது. மேலும் சிங்கப்பூர் செல்லவும் முடிவு செய்து உள்ளது.

வளைகுடா நாடுகளில்
பெண்களை துன்புறுத்துபவர்களுக்கு வளைகுடா நாடுகளில் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. பெண்களை போதை பொருளாக பார்ப்பவர்களின் கண்களை தோண்டி எடுக்கும் வகையிலும் சட்டம் உள்ளது.

மகளிர் போலீசார்
அது போன்ற சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று சந்திர சேகரராவ் அறிவித்துள்ளார்.இதற்காக மகளிர் போலீஸ் நிலையத்தை அதிகப்படுத்தவும், பெண் போலீசாரை கூடுதலாக நியமிக்கவும் அவர் உத்தரவிட்டு உள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications