ஹால் டிக்கெட்டில் கே.சி.ஆர். படம்.. அப்படியே 'ஷாக்' ஆன மாணவர்!
ஹைதராபாத் : ஆந்திராவில் தனியார் பாலிடெக்னிக் மாணவரின் ஹால்டிக்கெட்டில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் புகைப்படம் தவறுதலாக அச்சிடப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர் கிரிஷ். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

பாலிடெக்னிக் தேர்வுகள் நடைபெற உள்ளதால், கிரிஷ் தனது ஹால்டிக்கெட்டை இண்டர்நெட் மையம் மூலம் பெற்றார். அப்போது, அந்த ஹால்டிக்கெட்டின் அவரது புகைப்படம் இடம்பெற வேண்டிய இடத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் புகைப்படம் இருந்ததைக் கண்டு கிரிஷ் அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக அவர் தனது கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். பின்னர், இது குறித்து மாநில தொழிற்கல்வி ஆணையரிடமும் அவர் புகார் செய்தார்.
அதனைத் தொடர்ந்து, அதே ஹால் டிக்கெட்டில் தெலுங்கானா முதல்வரின் புகைப்படத்திற்கு அருகிலேயே மாணவர் கிரீஷின் புகைப்படம் ஒட்டப்பட்டது. தற்போது அந்த ஹால்டிக்கெட்டைப் பயன்படுத்தியே கிரிஷ் தேர்வு எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications