ரயிலில் சென்று முதல்வராக பதவியேற்கிறார் கேஜ்ரிவால்
டெல்லி: மெட்ரோ ரயிலில் பயணித்து டெல்லி முதல்வராக பதவியேற்கப் போவதாக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி ராம் லீலா மைதானத்தில் நாளை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், அவரது அமைச்சரவை சகாக்கள், எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்கின்றனர்.
இந்நிலையில், சிக்கன நடவடிக்கையாக, மெட்ரோ ரயிலில் சென்றே தானும் மற்ற எம்.எல்.ஏ.க்களும் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மக்கள் தர்பார்
முதல்வராகப் பொறுப்பேற்கும் முன்பே டெல்லியில் மக்கள் தர்பார் நிகழ்ச்சியை அர்விந்த் கேஜ்ரிவால் நடத்தி வருகிறார். இதற்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்துள்ளது.

மக்கள் ஆதரவு
இந்நிலையில், இன்று 3-வது நாளாக அவர் மக்கள் தர்பாரை நடத்தினார். அப்போது அவர் பொது மக்களிடம், பேசிய அவர் சிக்கன நடவடிக்கை பற்றி பேசினார்.
மக்கள் தர்பாருக்கு கிடைத்துள்ள ஆதரவு குறித்து அவர் கூறுகையில்: "மக்களின் அமோக ஆதரவு அரசு நிர்வாகம் சீர்கெட்டுள்ளதையும், அதை சரி செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதையும் உணர்த்துகிறது. அதனாலேயே மக்கள் திரண்டு வந்து தங்கள் பிரச்சினைகளை தெரிவிக்கின்றனர்" என்றார்.

நிதி சர்ச்சை
தேர்தலின் போது அரவிந்த் கெஜ்ரிவால் இணையதளம் மூலம் 63 ஆயிரத்திற்கு அதிகமானவர்களிடம் கட்சிக்காக நிதி திரட்டி உள்ளார். இது ரூ.19 கோடியை தாண்டி உள்ளது.
இது குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வெளிநாட்டிலிருந்து ஆம் ஆத்மி கட்சி நிதி பெற்றது தொடர்பாக ஆய்வு செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்திருந்தது.

எதிர்கொள்ளத்தயார்
இந்நிலையில், இது குறித்து இன்று கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் நாங்கள் விசாரணையை எதிர்கொள்ள தயார் என கூறி உள்ளனர். கட்சிக்கு வந்த நிதி குறித்து ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைத்து உள்ளோம். கணக்கை எப்போது வேண்டுமானாலும் காட்ட தயார் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications