சுவாமிஜியிடம் வெற்றிக்கான மந்திரம் கேட்ட கேஜ்ரிவால்
வாரணாசி: உத்தரபிரதேசமாநிலம் வாரணாசியில் சாமியார் ஒருவரை சந்தித்து ஆசி பெற்ற ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் வெற்றிக்கான மந்திரத்தை கேட்டுப் பெற்றுள்ளார்.
வாரணாசி தொகுதியில் பாஜகவின் நரேந்திரமோடியை எதிர்த்து அரவிந்த் கேஜ்ரிவால் போட்டியிடுகிறார். இதனால், நாட்டின் கவனத்தை இந்த தொகுதி ஈர்த்துள்ளது. வரும் 12ம்தேதி இத்தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதையொட்டி வாரணாசியில் இன்று கேஜ்ரிவால் தொடர் பேரணிகளை நடத்திவந்தார். காசி பித்யா மடத்தின் சுவாமிஜி அவிமுகேஷ்வரானந்த்தை சந்தித்த கேஜ்ரிவால் வெற்றிக்கான மந்திரத்தை தந்து அருளுமாறு கேட்டுக்கொண்டார். அப்போது சாமியார், ருத்ராட்சத்தை எடுத்து கேஜ்ரிவாலிடம் கொடுத்தார்.
இருவரும் சுமார் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர். கேஜ்ரிவால் வெற்றி பெற்றால் கங்கை நதியை தூய்மையாக வைத்துக்கொள்ள உதவ வேண்டும் என்று சுவாமிஜி கேட்டுக்கொண்டாராம். இதை பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்த அவிமுகேஷ்வரானந்த், "கங்கை மீது கேஜ்ரிவால் வைத்துள்ள நம்பிக்கையை பார்த்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது" என்று கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications