லோக்சபா தேர்தல்: ஆம் ஆத்மி பி.எம். வேட்பாளர் கேஜ்ரிவால்? 15 நாளில் வேட்பாளர் பட்டியல்!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பிரதான கட்சிகளை கலங்கடித்த ஆம் ஆத்மி கட்சி லோக்சபா தேர்தலுக்கும் தயாராகி வருகிறது. டெல்லியில் இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று கூடி விவாதித்தது.
டெல்லி சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக இன்று தேசிய செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியது.

23 பேர் கொண்ட அக்கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அடுத்த 10 முதல் 15 நாட்களில் ஆம் ஆத்மி கட்சியின் முதலாவது வேட்பாளர் பட்டியலை வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ், ராகுல் காந்தியும் நரேந்திர மோடியும் பிரதமர் பதவிக்காக போட்டியிடுவது துரதிருஷ்டவசமானது. அவர்கள் இருவரைவிட நாடு மிகச் சிறந்த ஒருநபரை எதிர்பார்க்கிறது. எங்களுடைய கனவு கேஜ்ரிவால்தான் நாட்டின் பிரதமராக வேண்டும் என்பது. அவருக்குத்தான் அந்த தகுதி இருக்கிறது என்றார்.
லோக்சபா தேர்தலிலும் கேஜ்ரிவாலையே பிரதமர் வேட்பாளராக ஆம் ஆத்மி அறிவிக்கலாம் என்பதையே யோகேந்திர யாதவின் பேட்டி சுட்டிக்காட்டுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications