டெல்லி சட்டசபைக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும்: ஜனாதிபதியை சந்தித்து கெஜ்ரிவால் கோரிக்கை
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து டெல்லி சட்டசபைக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. முதல்வராக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்றார். ஆனால் ஊழலுக்கு எதிரான ஜன லோக்பால் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றாததை கண்டித்து முதல்வராக பதவியேற்ற 49 நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பாஜக டெல்லியில் ஆட்சி அமைக்க தன் கட்சி எம்.எல்.ஏ.க்களை வாங்க முயற்சி செய்வதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் அவர் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை வியாழக்கிழமை சந்தித்து டெல்லி சட்டசபைக்கு மறுதேர்தல் நடத்த வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறியுள்ளார்.
கெஜ்ரிவால் பிரணாபிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,
கடந்த சில நாட்களில் பாஜக என் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 15 பேரை அணுகியுள்ளது. அவர்களுக்கு அமைச்சர் பதவி, சொத்துக்கள் மற்றும் ரூ.10 முதல் 20 கோடி பணம் தருவதாக பாஜகவினர் ஆசை வார்த்தை காட்டியுள்ளனர். ஷாலிமர்பாக் எம்.எல்.ஏ. பந்தன குமாரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அவர் இது குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால் கடந்த ஒரு மாதத்தில் அவர்கள் அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்தியதை பார்த்து அவர்கள் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பாஜக அரசு ஊழலுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மக்கள் மத்தியில் அவர்களின் மதிப்பு குறைந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் வந்தால் தோல்வி அடைந்துவிடுவோம் என்று பாஜக அஞ்சுகிறது. அதனால் அது பிற கட்சி எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கெஜ்ரிவால் பிரணாபை பார்த்தது நாடகம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. டெல்லியில் எப்பொழுது தேர்தல் வந்தாலும் எங்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் கெஜ்ரிவால் தான் எப்படியாவது அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று துடிக்கிறார் என்று காங்கிரஸ் குற்றமசாட்டியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications