இப்படிக் கருகிப் போயிரும் உங்க நுரையீரலும்.. டிவிட்டர் மூலம் பீதியைக் கிளப்பிய கெஜ்ரிவால்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சுற்றுச்சூழல் மாசின் கோரத்தை மக்களுக்கு விளக்க நினைத்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பரபரப்பு டிவிட்டைப் போட்டுள்ளார். அது வைரல் ஆகியுள்ளது.

ஆரோக்கியமான நுரையீரல் மற்றும் மாசு, புகை காரணமாக பாதிக்கப்பட்ட நுரையீரல் ஆகியவற்றின் படத்தை போட்டு டிவிட் செய்துள்ளார் கெஜ்ரிவால். இனியும் நாம் சுற்றுச்சூழல் மாசு, புகை மாசு குறித்துக் கவலைப்படாமல் இருந்தால் நமது நிலையும் இப்படி ஆகி விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கெஜ்ரிவாலின் இந்த டிவிட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் இதை ரீட்வீட் செய்து வருகின்றனர்.

அபாயகரமான புகை மாசு

அபாயகரமான புகை மாசு

டெல்லியில் சுற்றுச்சூழல் மாசு பெரும் பிரச்சினையாகி வருகிறது. உச்சநீதிமன்றமே வே்தனைப்படும் அளவுக்கு சுற்றுச்சூழல் சீர்கேடு போய் விட்டது. இதையடுத்து டெல்லி மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளில் அதிரடியாக இறங்கியுள்ளது.

கார்களுக்குக் கட்டுப்பாடு

கார்களுக்குக் கட்டுப்பாடு

கார்களுக்கு பல விதமான கட்டுப்பாடுகளை அது அறிவித்து வருகிறது. ஒற்றைப்படை பதிவெண் கொண்ட கார்களையும், இரட்டைப் படை எண்களைக் கொண்ட கார்களுக்கும் தனித் தனி நாட்களில் கார்களை ஓட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

டீசல் வாகனங்களுக்குக் கட்டுப்பாடு

டீசல் வாகனங்களுக்குக் கட்டுப்பாடு

இதேபோல டீசல் வாகனங்களையும் கட்டுப்படுத்துவது குறித்து யோசித்து வருகிறது டெல்லி அரசு. இந்த நடவடிக்கைகளில் முதல்வர் கெஜ்ரிவால் தீவிரம் காட்டி வருகிறார்.

டிவிட்டரில் அதிரடி

இந்த நிலையில் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு படத்தைப் போட்டு பீதி கிளப்பியுள்ளார். அதில் ஆரோக்கியமாக உள்ள மனித நுரையீரல் படத்தையும், கெட்டுப் போன நுரையீரல் படத்தையும் போட்டுள்ளார் கெஜ்ரிவால்.

இமாச்சல் டூ டெல்லி

இமாச்சல் டூ டெல்லி

அதில் இந்தப் படத்தை எடுத்தவர் டாக்டர் டிரெஹான். இடது புறம் உள்ள ஆரோக்கியமான நுரையீரலுக்குச் சொந்தக்காரர் 55வயதான இமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்தவர். வலது புறம் உள்ள புகை மாசு காரணமாக பாதிப்படைந்த நுரையீரலுக்குச் சொந்தக்காரர் டெல்லியைச் சேர்ந்த 52 வயது நபர் என்று கூறியுள்ளார் கெஜ்ரிவால்.

வைரல் ஆனது

வைரல் ஆனது

கெஜ்ரிவால் போட்டுள்ள இந்தப் படங்கள் தற்போது வைரல் ஆகியுள்ளது. இதை பலரும் ரீட்வீட் செய்து வருகின்றனர். கடந்த சில மணி நேரங்களில் மட்டும் இது 2000 முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+