மீண்டும் ஜாமீன் தொகை கட்ட மறுப்பு: கேஜ்ரிவாலை மேலும் 14 நாள் சிறையிலடைக்க கோர்ட் உத்தரவு!
டெல்லி: நிதின் கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கில் மீண்டும் ஜாமீன் தொகை கட்ட மறுத்ததால் ஆம் ஆத்மி கட்சித் தாலிவர் அரவிந்த் கேஜ்ரிவாலை மேலும் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிதின் கட்காரி ஊழல்வாதி என்று சில மாதங்களுக்கு முன்பு அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து கேஜ்ரிவால் மீது நிதின் கட்காரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணையின் போது ரூ10 ஆயிரத்துக்கான பத்திரங்களைத் தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக் கொள்ள டெல்லி நீதிமன்றம் 2 நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அரசியல் வழக்குக்கு எல்லாம் ஜாமீன் தொகை கட்ட முடியாது என்பது எங்கள் கொள்கை என்றார்.
இதனால் கேஜ்ரிவாலை 2 நாள் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் முடிவிலும் ரூ10 ஆயிரம் ஜாமீனுக்குரிய பிணைத் தொகையை கட்ட முடியாது என்று கேஜ்ரிவால் பிடிவாதமாக இருந்தார்.
இதையடுத்து அரவிந்த் கேஜ்ரிவாலை மேலும் 14 நாட்கள் அதாவது ஜூன் 6-ந் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பின்னர் கேஜ்ரிவால் மீண்டும் டெல்லி திகார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications