கேரள வங்கியின் ஆராய்ச்சி பூங்காவிற்கு “கலாம்” பெயர் சூட்ட முடிவு
Subscribe to Oneindia Tamil
கோழிக்கோடு: கேரள மாநிலத்தில் ஆராய்ச்சி பூங்கா ஒன்றிற்கு மறைந்த மக்கள் ஜனாதிபதி கலாம் அவர்களின் பெயர் சூட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
பீகாரில் வேளாண்மை கல்லூரிக்கு கலாம் பெயர், அசாமில் கலாம் பெயரில் புத்தாக்க பயிற்சி நிலையம், கேரளாவில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு கலாம் பெயர் என ஒவ்வொரு மாநிலமும் போட்டி போட்டுக்கொண்டு மறைந்த முன்னாள் ஜனாதிபதி கலாமுக்கு மரியாதை செய்து வருகின்றன.

அந்த வகையில் கேரளாவில் கோழிக்கோடு மாவட்ட கூட்டுறவு வங்கி உருவாக்குகிற கூட்டுறவு இன்ஸ்டிடியூட் மற்றும் ஆராய்ச்சி பூங்காவுக்கு கலாம் பெயரை சூட்டுகிறது.
கோழிக்கோட்டில் நடைபெற்ற மாவட்ட கூட்டுறவு வங்கியின் ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications