காலேஜ் கட்டியதுக்கு யார் காசு தருவா?.. சோனியா காந்திக்கு நோட்டீஸ் விட்ட கேரள பில்டர்!
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் கட்டப்பட்ட ராஜீவ் காந்தி வளர்ச்சிக் கல்விக் கழகத்தின் கட்டடத்தைக் கட்டியதற்காக காங்கிரஸ் தரப்பிலிருந்து தனக்குரிய கட்டணத்தைத் தராததை அடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோருக்கு கேரளாவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருவனந்தபுரத்தில் நெய்யார் அணை பகுதியில் இந்த கல்வி நிறுவனம். கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது இது கட்டப்பட்டது. ரூ. 2.5 கோடியில் இது கட்டப்பட்டது. 2013ம் ஆண்டு இதை சோனியா காந்தி தொடங்கி வைத்தார். காங்கிரஸ் சார்பில் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் கட்டுமானப் பணிக்குரிய கட்டணத்தை இன்னும் காங்கிரஸ் கட்சி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து கட்டுமான நிறுவனமான ஹெதர் கன்ஸ்டிரக்சன்ஸ் நிறுவனம், சோனியா காந்தி, முன்னாள் கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்டோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆனால் இதற்கு காங்கிரஸார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உள்ளூர்ப் பிரச்சினையில் சோனியாவை இழுப்பது கண்டனத்துக்குரியது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து டெல்லியில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சூரஜ்வாலா கூறுகையில் இது முற்றிலும் தவறானது. சோனியாவுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. அவர் எந்த வகையிலும் இதில் தொடர்பு கொண்டிருக்கவில்லை.இது அந்த நிறுவனத்தின் என்ஜீனியர்களுக்கும், ஒப்பந்தகாரர்களுக்கும் இடையிலான மோதல். இதில் காங்கிரஸுக்குத் தொடர்பு இல்லை என்றார்.
சோனியா, ரமேஷ் சென்னிதலா தவில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, மாநில காங்கிரஸ் தலைவர் சுதீரன் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications