பாலியல் புகார் எதிரொலி.. பிஷப் பிராங்கோ நீக்கம்.. வாடிகன் அதிரடி!
கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி உள்ள பிஷப் பிராங்கோ தற்போது பிஷப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம்: கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி உள்ள பிஷப் பிராங்கோ தற்போது பிஷப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இவரை தற்காலிகமாக நீக்குவதாக வாடிகன் சர்ச் அறிவித்துள்ளது. கடந்த வாரம்தான் இவர் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிஷப் விவகாரம் கேரளா மட்டுமில்லாமல் உலகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரை கைது செய்ய கோரி தீவிரமாக புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

என்ன நடந்தது
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தில்தான் இவர் பிஷப்பாக இருந்தார். அப்போது அங்கு இருந்த பஞ்சாப்பை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, இவர் வன்புணர்வு செய்ததாக, அந்த கன்னியாஸ்திரி புகார் அளித்தார். 2014-2016 வரை இரண்டு வருடம் அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார்.

என்ன விளக்கம்
இதுகுறித்து சில முரண்பட்ட விளக்கங்களை அளித்து வந்தார் பிராங்கோ. அதாவது முதலில் எங்களுக்குள் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றார். பின் இது ஒரு வழிபாடு முறை, இது பாலியல் தொல்லை கிடையாது என்று எல்லாம் வித்தியாசமான விளக்கம் கொடுத்து தப்பிக்க பார்த்தார். ஆனால் நாளுக்கு நாள் அவருக்கு எதிராக நிறைய ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டது.

விளக்கினார்
பிராங்கோவிற்கு எதிரான போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அவருக்கு எதிராக கேரள ஹைகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை வரும் 24 ஆம் தேதி நடக்க உள்ளது. கடந்த வாரம்தான் இவர் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்காலிக நீக்கம்
வாடிகன் மூலம் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது பாலியல் புகாருக்கு உள்ளாகிய காரணத்தால் கேரள பிஷப் பிராங்கோ தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவரை தற்காலிகமா நீக்குவதாக வாடிகன் அறிவித்து இவரை பணியில் இருந்து விடுவித்துள்ளது. போப் பிரான்சிஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications