குளச்சலில் துறைமுகம் அமைப்பதற்கு கேரளா எதிர்ப்பு: மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்
திருவனந்தபுரம்: தமிழகத்தில் குளச்சல் அருகே இனையம் பகுதியில் மிகப்பெரிய துறைமுகம் அமைப்பதால் கேரளாவில் விழிஞ்சம் துறைமுகம் பாதிக்கும் என்பதால் அந்த திட்டத்தைக் கைவிடக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் குளச்சல் அருகே இனயம் பகுதியில் மிகப்பெரிய துறைமுகம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை கொள்கை அளவிலான ஒப்புதலை அளித்துள்ளது. இத்திட்டத்திற்கு கேரளத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரள அமைச்சரவையிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்திற்கு அருகாமையில் இன்னொரு துறைமுகம் அமைக்க வேண்டிய அவசியம் வந்தது ஏன்? என கேரள துறைமுகத் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.
கொச்சி துறைமுகத்தை காட்டி விழிஞ்சம் துறைமுகத் திட்டத்திற்கு மத்திய அரசு இதற்கு முன் எதிர்ப்பு தெரிவித்தது. எனவே, இப்போது மாநில அரசு தனது அதிருப்தியை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், குளச்சல் துறைமுகத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகவும், இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார்.
35 கி.மீ. தொலைவில் இரண்டு துறைமுகங்கள் அமைவதால் பயனில்லை என்றும், இந்த புதிய துறைமுகம் விழிஞ்சம் வர்த்தக துறைமுகத்தை பாதிக்கும் என்றும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications