பினராயி விஜயனுக்கு என்னாச்சு?.. மீண்டும் அமெரிக்கா செல்கிறார்.. மருத்துவ பரிசோதனைக்காக என தகவல்!
கேரளா முதல்வர் பினராயி விஜயன் மருத்துவப் பரிசோதனைக்காக வருகிற ஆகஸ்ட் மாதம்19 ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார்.
திருவனந்தபுரம்: கேரளா முதல்வர் பினராயி விஜயன் மருத்துவப் பரிசோதனைக்காக வருகிற ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ள தகவல் வெளியாகியுள்ளது.
73 வயதாகும் கேரளா முதல்வர் பினராயி விஜயன் வருகிற ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டா மாநிலத்துக்கு மருத்துவப் பரிசோதனைக்காக செல்ல உள்ளார்.

மின்னோசோட்டா மாநிலம் ரோச்சஸ்டரில் உள்ள மாயோ கிளினிக்கில் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வதற்கும் சிகிச்சை பெறுவதற்கும் அமெரிக்காவில் 19 நாட்கள் இருக்க திட்டமிட்டுள்ளார்.
பினராயி விஜயன் வருகிற ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி முதல் செப்டம்பர் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை அமெரிக்காவில் இருப்பார். அவருக்கு அங்கே என்ன விதமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்ன நோய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. முதல்வர் பினராயி விஜயனின் வெளிநாட்டு பயணத்துக்கான செலவை கேரள மாநில அரசின் அரசியல் நிர்வாகத்துறை தான் ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பினராயி விஜயன் அமெரிக்காவுக்கு 13 நாட்கள் பயணம் செய்திருந்தார். அங்கே அவருக்கு சில மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அப்போது பினராயி விஜயனின் மனைவியும் உடனிருந்தார்.
அதே போல, பினராயி விஜயன் கடந்த மார்ச் மாதம் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வழக்கமான மருதுவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கேரளா முதல்வர் பினராயி விஜயன் இரண்டாவது முறையாக மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல இருக்கும் தகவல் வெளியாகியிருப்பதால், கேரள மக்களிடையே பினராயி விஜயனுக்கு என்னாச்சு என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications