கேரளா: ஆசிரியை குளிப்பதை எட்டிப் பார்த்த எம்.பி.யின் டிரைவர் தலை "கிரிலில்" சிக்கியது!!
திருவனந்தபுரம்: கேரளாவில் அரசியல்வாதிகளின் உதவியாளர்கள் 'லீலைகள்' தொடர் கதையாகி வருகிறது. தற்போது கேரளா எம்.பி. ஒருவரின் ஓட்டுநர், ஆசிரியை குளிப்பதை திருட்டுத்தனமாக எட்டிப் பார்த்தபோது அவரது தலை கிரிலில் சிக்கிய நிலையில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.
கேரளாவில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் முதல்வர் உம்மன் சாண்டியின் கால் சென்டரில் பணியாற்றிய ஒருவர், பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட புகாரின் பேரில் நீக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஆர்யாதன் முகமதுவின் உதவியாளர், காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலேயே பெண் ஒருவரை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

இந்த வரிசையில்தான் வயநாடு காங்கிரஸ் எம்.பி. ஷானவாஸின் ஓட்டுநர் நவ்சாத் சிக்கியுள்ளார். மலப்புரம் மாவட்டம் ஐகரப்படியை சேர்ந்த நவ்சாத், அவரது வீட்டருகே வசித்து வரும் ஆசிரியை குளிக்கும் போது திருட்டுத்தனமாக குளியல் அறையை எட்டிப் பார்த்திருக்கிறார்.
குளியல் அறையின் வெண்டடிலேட்டரின் கிரில் வழியாக தலையை விட்டு ஆசிரியை குளிப்பதை நவ்சத் பார்த்து கொண்டு இருந்தார். ஆசிரியை குளியலையை விட்டு வெளியேறிய பின்னர் கிரிலில் இருந்து தலையை எடுக்க நவ்சாத் முயன்றார்.
ஆனால் கிரிலில் தலை சிக்கிகொண்டது. வேறுவழியே இல்லாத நிலையில் கூச்சல் போட்டு போராடிப் பார்த்திருக்கிறார்.
மிக நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னரே நவ்சத்தின் அலறல் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்தது. பின்னர் குளியல் அறைக்கு சென்று நவ்சாத்தை பெரும் போராட்டத்துக்குப் பின்னர் மீட்டிருக்கின்றனர்.
நவ்சத்தும் தாம் ஆசிரியை குளிப்பதை பார்த்த போது தலை சிக்கியதை ஒப்புக் கொண்டார். அவர் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications