மிஸ்டர் சசி தரூர்... ஓவர் "மோடி" ஜால்ரா உடம்புக்கு நல்லதில்ல - குட்டு வைக்கும் காங்கிரஸ்
திருவனந்தபுரம்: பிரதமர் மோடி எது செய்தாலும் அதை பாராட்டுவதற்கு என்று காங்கிரஸில் ஒரு கோஷ்டி உருவெடுத்துள்ளது. இதில் மிக முக்கிய பங்கு வகிக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூருக்கு காங்கிரஸில் எதிர்ப்பு வலுத்துள்ளது.
பிரதமர் மோடி புதிய திட்டங்களை அறிவிக்கும் போதும் சரி... முக்கிய உரைகள் நிகழ்த்தினாலும் சரி.. அதை ஆஹா ஓஹோவென புகழ்வதற்கென காங்கிரஸ் தலைவர்கள் போட்டி போட்டி ட்விட்டரில் காத்துக்கிடக்கிறார்கள். இவர்களில் சசி தரூர் மிக முக்கியமானவர்.

ஆனால் தமது நிலைப்பாடு பாஜகவுக்கு ஆதரவானது அல்ல; இந்திய அரசுக்கு ஆதரவானது என்று ஒரு சப்பைக் கட்டு காரணத்தையும் ட்விட்டரில் போட்டுக் கொண்டிருப்பவர் சசி தரூர். தற்போது இவருக்கு கேரளா மாநில காங்கிரஸில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து கேரளா காங்கிரஸ் மூத்த தலைவரான எம்.எம். ஹாசன் கூறுகையில், மோடியை ஓவராக புகழ்வதை சசி தரூர் நிறுத்த வேண்டும். சசி தரூரின் இந்த புகழார செயல்பாடுகள் குறித்து மாநில காங்கிரஸ் ஆராய்கிறது என்று கூறியுள்ளார்.
இதேபோல் மூத்த காங்கிரஸ் தலைவரான மணிசங்கர் அய்யரும், பிரதமர் மோடி தம்மை அழைத்தார் என்பதை சசி தரூர் பெருமையாக கருதலாம்.. ஆனால் நானோ மோடி என்னை அழைக்காததே எனக்கு கவுரவம் என கருதுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
இப்படி சசி தரூருக்கு எதிராக காங்கிரஸில் பஞ்சாயத்து குரல் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications