திருமண வீட்டை சுற்றி வெள்ளம்.. மணமகள் கால் தரையில் படாமல்.. தூக்கி கொண்ட மணமகன்
Recommended Video
கண்ணூர்: கேரளாவில் மழை பலருக்கு வேதனையை கொடுத்துள்ளது. ஆனால் இந்த மழை ஒரு இளம் ஜோடிக்கு ஆனந்தத்தை கொடுத்துள்ளது. ஆம் மணமகள் திவ்யா வீட்டை வெள்ளம் சூழந்த நிலையில், திருமணம் முடிந்தபின்னர் மனைவியை அப்படியே தூக்கிச்சென்றார் ராஜேஷ். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன்காரணமாக அங்கு கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக கண்ணூர், வயநாடு, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்லாயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பலர் வீடுகளை இழந்துதவித்து வருகிறார்கள்.

கண்ணூரில் திருமணம்
இந்நிலையில் கண்ணூர் அருகே சிரக்கொல்லி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திவ்யா என்பவருக்கும் நேற்று முன்தினம் மாலை திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மணமகள் வீட்டில் வெள்ளம்
இதற்கான ஏற்பாடுகள் இருவீட்டாரும் செய்து இருந்தார்கள். ஆனால் கண்ணூர் பகுதியில் கனமழை கொட்டியதால் மணமகள் வீடு உள்பட அந்தபகுதியில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களையும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வீட்டிலேயே திருமணத்தை நடத்த மணவீட்டார்கள் முடிவு செய்தனர். ஆனால் மணமேடையும் வெள்ளத்தில் மூழ்கியது.

தாலி கட்டினார் ராஜேஷ்
இதனால் மணமகள் வீட்டிற்குள்ளே குறித்த முகூர்த்தத்தில் திருமணம் இனிதே நடந்தது. இந்த திருமண விழாவில் உறவினர்கள் படகிலும் நடந்தும் சென்று கலந்து கொண்டனர்.
|
மனைவியை தூக்கிய கணவன்
மணமகன் ராஜேஷ், மணமகள் திவ்யாவுக்கு தாலி கட்டிய பின்னர் இருவரும் வெளிய வந்தனர். அப்போது மணமகள் திவ்யாவுக்கு தண்ணீரில் கால் வைக்க தயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மணமகன் ராஜேஷ் தனது மனைவி திவ்யாவை அப்படியே அலோக்காக தூக்கிக்கொண்டு சென்றார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications