7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.. மீண்டும் தொடங்கிய மழை.. கேரளாவில் தொடரும் சோகம்

கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், மீண்டும் பெரிய அளவில் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், மீண்டும் பெரிய அளவில் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

கேரளாவில் கடந்த ஒருவாரமாக பெரிய அளவில் மழை பெய்கிறது. இதனால் அங்கு பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

14 மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக மலை பகுதிகளான இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கை

கேரளா வெள்ளம் காரணமாக தற்போது பலி எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவு காரணமாகவும், நீரில் மூழ்கியது காரணமாகவும் இவ்வளவு மரணம் நிகழ்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 13 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். மேலும் 300 க்கும் அதிகமானோர் வெள்ளத்தில் காணவில்லை.

மீட்பு பணிகள்

மீட்பு பணிகள்

கேரளாவில் ராணுவமும், பேரிடர் மீட்பு படையினரும் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 2 வாரமாக மீட்பு பணியில் ஈடுபட்டும் கூட ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்ற முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அதில் மிகவும் கஷ்டப்பட்டு இவர் மீட்பு பணியில் ஈடுபடும் புகைப்படம் வைரலாகி உள்ளது.

மீண்டும் மழை

மீண்டும் மழை

கேரளாவில் மீண்டும் பலத்த மழை பெய்கிறது. வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்வதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே வயநாடு மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரெட் அலெர்ட் விடுகிறார்கள்

ரெட் அலெர்ட் விடுகிறார்கள்

கேரளாவில் 7 மாநிலத்திற்கு பெரும் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இடுக்கி, கொல்லம், கோழிக்கோடு, கொச்சி, மலப்புரம், கண்ணூர் ஆகிய பகுதிகளுக்கு பெரிய அளவில் வெள்ளம் ஏற்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே 40 ஆயிரம் மக்கள், அவர்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+