For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளா வெள்ளம்: உதவும் திமுக.. ரூ.1 கோடி நிதி உதவி அறிவித்த ஸ்டாலின்

கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ள பாதிப்புகளுக்கு திமுக சார்பாக ரூ. 1 கோடி உதவி அளிக்கப்படும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ள பாதிப்புகளுக்கு திமுக சார்பாக ரூ. 1 கோடி உதவி அளிக்கப்படும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. கடந்த ஒருவாரமாக அங்கு பெரிய அளவில் மழை பெய்கிறது.

Kerala Floods: Stalin extends his support, decides to give Rs.1 crore relief fund

14 மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுக்க வெள்ளம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக மலை பகுதிகளான இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

கேரளா வெள்ளம் காரணமாக தற்போது பலி எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவு காரணமாகவும், நீரில் மூழ்கியது காரணமாகவும் இவ்வளவு மரணம் நிகழ்ந்துள்ளது. மேலும் 150க்கும் அதிகமானோர் வெள்ளத்தில் காணவில்லை.

Kerala Floods: Stalin extends his support, decides to give Rs.1 crore relief fund

இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில், கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ள பாதிப்புகளுக்கு திமுக சார்பாக ரூ. 1 கோடி உதவி அளிக்கப்படும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

அதேபோல் மீட்பு பணிகளில் உதவுவதாகவும் கூறியுள்ளார். திமுக அறக்கட்டளை சார்பில் நிதி உதவி அளிக்கப்படுகிறது. கேரளா முதல்வரின் அவசர நிதியுதவி பிரிவிற்கு பணம் அனுப்பப்படுகிறது.

English summary
Kerala Floods: DMK acting chief Stalin extends his support, decides to give Rs.1 crore relief fund. Due to Kerala Heavy rains and landslides at least 37 people have killed so far and military forces landed for rescue work.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X