மாட்டிறைச்சிக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசுக்க எதிராக கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
திருவனந்தபுரம்: மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசுக்க எதிராக கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. முதல்வர் பினராய் விஜயன் மாட்டிறைச்சிக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவந்தார்.
மத்திய அரசு கடந்த மாதம் மாட்டிறைச்சிக்கு தடைவிதித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மாட்டிறைச்சி மீதான தடை மத்திய அரசின் மதவாதத்தை வெளிப்படுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மத்திய அரசுக்கு எதிராக கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

கேரள சட்ட சபையில் தீர்மானம்
தமிழகத்தலும் மத்திய அரசுக்கு எதிராக மாட்டுக்கறி விருந்து தடல்புடலாக நடைபெற்றது. இந்நிலையில்
மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசுக்க எதிராக கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பினராய் விஜயன்..
கேரள முதல்வர் பினராய் விஜயன் சட்டசபையில் மாட்டிறைச்சிக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்தார். இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் தவிர மற்ற எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர்.

சட்டசபையில் சிறப்பு விவாதம்
சட்டசபையின் சிறப்பு கூட்டம் சபாநாயகர் தலைமையில் இன்று காலை கூடியது. இக்கூட்டத்தில் இறைச்சிக்காக மாடுகள் விற்பதற்கு மத்திய அரசு விதித்துள்ள தடை தொடர்பாக விவாதம் நடைபெற்றது.

தீர்மானம் நிறைவேற்றம்
விவாதத்திற்கு பிறகு மத்திய அரசின் தடைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் பினராய் விஜயன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் இந்த சிறப்பு விவாதத்தில் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே எதிர்ப்பு
இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதற்கு மத்திய அரசு விதித்துள்ள தடைக்கு கேரள அரசு ஏற்கனவே கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது. கேரளாவில் இந்த தடை அமல்படுத்தப்படாது என ஏற்கனவே கேரள அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications