முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் முயற்சியில் இறங்கிய கேரளா: அதிர்ச்சியில் தமிழகம்
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு பணியை கேரள அரசு மீண்டும் துவங்கியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட கேரளா அரசு முனைப்பாக உள்ளது. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
அணையின் முழு கொள்ளளவான 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்த தமிழகம் போராடிக் கொண்டிருக்கிறது. அணை வலுவாக இல்லை அதனால் நீர்மட்டத்தை முழுகொள்ளளவுக்கு உயர்த்த முடியாது என்று கேரளா தெரிவித்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை பழுதடைந்துவிட்டது என்று கூறி புதிய அணை கட்டும் முயற்சியில் கேரள அரசு கடந்த 2007ம் ஆண்டு ஈடுபட்டது. புதிய அணை கட்ட ரூ.25 கோடி நிதியை கேரள அரசு ஒதுக்கியது.
இதையடுத்து வல்லக்கடவு செல்லும் பாதையில் 15 இடங்களில் ஆய்வுப் பணியை நடத்தியது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ஆய்வு பணியை கேரளா நிறுத்தியது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஆய்வுப் பணியை துவங்கியுள்ளது.
ஆய்வுப் பணிக்கு தேவையான பொருட்களை வல்லக்கடவு பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். கேரள நீர் பாசனத்துறை செயற் பொறியாளர் ஜாஸ் டேனியல் தலைமையில் 15 பேர் கொண்ட குழு சனிக்கிழமை ஆய்வில் ஈடுபட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications